பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. காரி கிழார் காரி கிழார்க்குரிய காரி என்ற ஊர் தொண்டை நாட் டில் உளது ; அவ்வூர் இப்போது இராமகிரி என வழங் கப்படுகிறது என்று கூறுகிருர் டாக்டர். உ. வே. சாமி நாதையர் அவர்கள். காரி கிழார் பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்திய செய்யு ளில், முக்கட்செல்வன் கோயிலை வலம்வருங்கால் சின் குடை தாழ்க : கின்னே வாழ்த்திய அந்தணரை வணங்குக என்று அறிவுரை உரைப்பதை நோக்கின், காரிகிழார், சிவனே வழிபடுகடவுளாகக்கொண்ட சைவர் ; வைதீக வொழுக்கினர் என்பது புலனும், இவர் பெயரும், சிவ பிரான்பால் இவர் காட்டும் அன்பும், பெரிய புராணத் திலும், திருவாலவாயுடையார் கிருவிளையாடற் புராணத் லும் கூறப்பெறும் காரிநாயனர், காரியார் என்பவர் பெயர்களே நமக்கு கினைப்பூட்டுகின்றன. பழங்காலத்து அரசியலில் அரசனே எல்லாம் ; அவன் நல்லஞயின் நாட்டில் நல்லாட்சி நிலவும்; அவன் தீயனுயின் நாட்டில் கொலையும், கொள்ளேயும் கின்று ஆட்சி புரியும் ஆதலின், அக்கால மக்கள் தங்கள் அாசன் நல்ல ளுதலை விரும்பினர் ; அக்கால அறிஞர்களும், அரசன் நல்லகை வேண்டியதன் இன்றியமையாமையினே அவனி டத்திலேயே எடுத்துக்கூறி அறிவுறுத்தினர் ; முதுகுடு மிப் பெருவழுதியைப் பாராட்டிய காரிகிழார், அவன் மக்கட் பயனும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினேயும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என வாழ்த்து தற்குமுன், அவன் அவ் வாழ்வு பெறுதல், அவன் நல் லாட்சி மேற்கொண்ட வழியேயாம் ஆதலின், கின் குடைநிழல் வாழ்வார் அனேவரையும் காய்தல், உவத்தல் அகற்றி ஒப்பமதித்து நடத்துவாயாக; வேண்டுவார்க்குப் பரிந்து பழிபுரியாது, துலாக்கோல்போல் கின்று திே செலுத்துவாயாக’ என்று அறிவுரை கூறினர் ; இவ் வாறு அறிவுறுத்தி நல்லனுக்கியபின்னரே, அற.நால் அறிந்த அந்தணர் கின்னே வாழ்த்துங்கால் அவரைப்