பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. கிள்ளிமங்கலங் கிழார் கிள் வளி மங்கலம் பாண்டிநாட்டகத்ததோர் ஊர்; இவர் அவ் ஆரினமாதலின் கிள்ளிமங்கலங் கிழார் எனப் பட்டார்; இவருக்குச் சோகோவனுர் என்ற இயற்பெய ருடைய மகனர் ஒருவர் இருந்தார்; அவரும் ஒர் உயர் தமிழ்ப் புலவராவர் ; கிள்ளிமங்கலங் கிழார் பாடிய பாக் கள் நான்கு, குறுந்தொகைக்கண் இடம் பெற்றுள்ளன ; வர் பாடல்கள், அவரோர் ஆழ்ந்த சிந்தனையாளர் என் பதை அறிவிக்கின்றன ; காதலின் இயல்பு குறித்து அவர் கூறும் விளக்கம் அவரின் அறிவின் பெருமைக்கு விளக் கம் தந்து கிற்கின்றது. யாமைப் பார்ப்பு தாய்முகம் நோக்கி வளரும் இயல் புடையது ; தாய் முகம் நோக்கும் வாய்ப்பிலாதுபோயின், அது வளர்ந்து வாழாது இறந்து அழியும். தாய்ப்பறவை யிட்ட முட்டை, அப் பறவை அதை அடுத்தடுத்துப் பாதுகாப்பதினலேயே குஞ்சாகிப் பய லுறும்; தாய்ப்பறவை அவ்வாறு காவாதுவிடின் அது அழுகி அழிந்துபோகும். . இவ்விரு உயிர்களின் இயல்புகளைக் காதலுக்கு உவமை யாக்கி, காதலின் உண்மை இயல்பினே உணர்த்தியுள்ளார் புலவர். யாமைப் பார்ப்பு, தாய்முகம் நோக்கி வளர்வதே போல், காதலும், தம் காதலரைப் பல்கால் காண்பதின. லேயே வளரும், பார்ப்பு தாய்முகம் நோக்காதவழி அழி வதேபோல், காதலரைப் பார்ப்பதின்றேல் காதலும் சிறுகச் சிறுகக் குறைந்து மறையும். முட்டை, தாய்ப்பறவை அடுத்தடுத்துப் பாதுகாப்பதால் குஞ்சாகிப் பயன் பெறு வதேபோல், காதலும், காதலர் இருவரும் மணந்து பிரி வின்றிக் கலந்து வாழ்ந்தவழியே வளர்ந்து இல்லறப்பயனே அளிக்கும் ; தாயின் பாதுகாவலேப் பெருத முட்டை அழிவதேபோல், காதலும், காதலர் மணந்து இடையீடு இன்றி வாழாராயின், இல்லறப் பயனளிக்காதே அழிந்து விடும் என அவர் கூறும் நயத்தை நோக்குங்கள் :