பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. கிள்ளிமங்கலங் கிழார்மகனுர் சோகோவனுர் சோகோவனுர் என்ற இயற்பெயருடையாய இவர், கிள்ளிமங்கலம் கிழார் என்ற பெரும் புலவரின் மகனுவர் ; இவ்விருவர்க்கும் உரிய கிள்ளிமங்கலம் பாண்டிநாட்டில் உளது என்ப; தமிழ்நாட்டில் மங்கலம் என்ற பெய ருடைய ஊர்கள் பல உள. ஆதலின், இவ்வூர் கிள்ளி மங்கலம் எனச் சிறப்பிக்கப்பட்டுளது ; ஊரைச் சிறப்பிக்க வரும் கிள்ளி என்பதோ, கோவனுர் பெயரைச் சிறப்பித்து கிற்கும் சோ என்பதோ எப்பொருள் குறித்து வந்துளது என்பது விளங்கவில்லை; இவர் பாடிய குறிஞ்சித் திணைச் செய்யுளொன்று நற்றிணைக்கண் வந்துளது. ' உடம்பும் உயிரும் வாடியக் காலும், என்னுற்றன கொல் இவை யெனினல்லது, கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லே ' என்பது விதி. நற்குடிவந்த மகளிர், இவ்விதிக்கு மாறுபட்டு நடவார் ; ஆனால், உண்மையி லேயே உயர்குடிவந்த பெண்ணுெருத்தி இவ்விதியை மதியாது, தலைமகனூர் செல்ல விரும்புகின்ருள் எனின், அச் செயல், அவள் அவன்பால் கொண்டுள்ள அன்பின் பெருமையினையும், அவ்வன்பு நிறைவேரு வண்ணம் அகன் றிருக்கும் அவன் அறியாமையினையும், அவன் வரினும் அவளைக் காணுவாறு அவள் தாய் மேற்கொண்டுள்ள காவற் கொடுமையினேயுமன்ருே உணர்த்துகின்றது ? இவ்வாறு, தலைவனூர் சென்று வரலாமா என்று எண்ணுமளவு துயருறும் அப் பெண்ணேப் புலவர் சோகோவனுரின் சொல்லோவியம் நம் க ண் மு ன் கொணர்ந்து காட்டுகிறது. ஒரு தலைமகன், களவொழுக்கத்தில் கன்றிய உள்ளத் தனுய் விரைவில் வரைந்து கொள்ளானுயினன். தலை வியோ இற்செறிக்கப்பட்டுளாள் ; அவளைச் சூழ அமைந்த