பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கிழார்ப் பெயர்பெற்ருேர் காவலோ கடத்தற்கரியது ; இவற்றைக் கடந்து அவனேக் காணலோ அரிது ; காணுது வாழ்தலோ அதனினும் அரிது; இத்தியர்நிலை போக்க வழிசெய்தல் அவளால் ஆகாது ; அது செய்யவல்லவன் அவனே ஆணுல், அவனே அது செய்யாதே கழிகின்ருன் ; இதல்ை அவளுக்கு அவன் மீது மாருச் சினம் பிறந்தது ; அதனுல் ஒருநாள் அவன் தன்மனே நோக்கி வந்தாளான் என்பதறிந்து, அவன் கேட்குமாறு கோழியிடம் " தோழி வரையாது வந்து செல்லும் தலைவன் நம் கிலேயினே அறியாதுள்ளானுதலின், அவன் அறிவுடையனல்லன் என்பதை அவனிடம் கூறி அறிவுபெறச் செய்தல்வேண்டும் ; அதைச் செய்வதற் காக வேண்டி, நம் அன்னேயும், அண்ணன்மாரும் அமைத் திருக்கும் அரிய காவலை எவ்வாருவது கடந்து, ம்ை காணத் தையும் மறந்து ஊர்மக்கள் கூடி கிற்கும் பொதுவிடத்தே சென்று, ஆங்குள்ளார்.பால் அவனூர் எது அது யாண் டுளது? என வாய்விட்டுக் கேட்டாவது வருவோமா ?” என்ருள். என்னே அவள் துயர்க் கொடுமை! அஃதறி யாத அவ்வாண்மகன், அவள் கூறுமாறு சான்ருேனல்லன் என்பது உண்மையேயன்ருே ? ' அருங்கடி யன்னே காவல் விேப் பெருங்கடை இறத்து, மன்றம் போகிப், பகலே, பலரும் காண, வாய்விட்டு, - அகல்வயல் படப்பை அவனுார் வினவிச் சென்மோ வாழி! தோழி ... வான்தோய் மாமலே காடனைச் சான்முேயல்லே' என்றனம் வாற்கே ’ (சற்: உசடு)