பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஎ. குறுங்கோழியூர் கிழார் சோழவேந்தர்களின் பழைய தலைநகராம் உறையூர்க் குக் கோழி அல்லது கோழியூர் என்பதும் ஒரு பெயராம் ; இக் கோழியூர்க்கும் குறுங்கோழியூர் கிழார் பிறந்த குறுங்கோழியூர்க்கும் யாதேனும் தொடர்பிருக்குமோ அறியோம். குறுங்கோழியூர் கிழார், காம் பாடிய பாக்கள் மூன்றினுலும் சேர அரசன் ஒருவனேயே பாடி யிருத்தலின், இவர் பிறந்த ஊர் சேரநாட்டைச் சேர்ந்த தாகவும் கொள்ளலாம். குறுங்கோழியூர் கிழாரால் பாடப்பெற்ருேன், சோ மான் யானைக்கண்சேய் மாந்தரஞ் சோல் இரும்பொறை யாவன்; பாண்டிய மன்னர்களுள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போற்றல் வாய்ந் தவனுவன் ; அவனேப் பகைத்தார் எவரும் அழியாது உயிர் பிழைத்தாால்லர், அத்துணை ஆற்றலுடையானவன் ; அவனுல் வெற்றிகொள்ளப்பட்டோருள் ேச | ம | ன் யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரவிரும்பொறையும் ஒருவ குவன்; எனினும், இவன் அவனின் ஏனேப் பகைவர்க்ளேப் போல் அழிந்து போகாமல் உயிர் பிழைத்திருந்ததோடு, அவன் கன்னே அடைத்து வைத்திருந்த சிறையினின்றும் 'தன் ஆற்றலால் தப்பி வந்து தன் ஆட்சியினையும் மேற் கொண்டான் எனின், இவன் பேராற்றல் வாய்ந்தவன் என்பதில் பிழையுண்டோ சேர வேந்தனின் இச் செயல், தமிழகம் முழுதும் பரவிப் புகழ் காலாயிற்று அஃதறிந்த குறுங்கோழியூர் கிழாரும், அவனேக் கண்டு பாராட்ட அவன் அரசிருக்கையாம் தொண்டிநகர் சென்ருர், சிறுகுன்று களிலும், பெருமலைகளிலும், காட்டிலும், காட்டிலும் அமர்ந்து நாடாண்ட அரசர்கள் எல்லாம் பணிந்து வாழ, காட்டில் கொடித நிகழாது செங்கோல் நடத்தி, குடிகளிடத்து வருந்தப் பெறும் பெருவரி பெருது, அவர் உண்டு எஞ்சிய ஆறிலொன்று பெற்று, நீதியை எவர்க்கும் ஒப்ப வழங்கி உலகாண்ட அவன்