பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஆ. குறுங்கோழியூர் கிழார் 87 கோடுமுற்றிய கொல்களிறு, நிலைகலங்கக் குழிகொன்று, கிளைபுகலத் தலைக்கூடி யாங்கு, பேட்ட அருமுன்பின் பெருந்தளர்ச்சி பலர் உவப்பப் பிறிதுசென்று மலர் தாயத்துப் பலர் காப்பண் மீக்கூறலின், " உண்டாகிய உயர் மண்னும் சென்றுபட்ட விழுக்கலனும் பெறல்கூடும் இவன் நெஞ்சுறப் பெறின்’ எனவும், எந்துகொடி இறைப்புரிசை வீங்குசிறை வியலருப்பம் இழந்து வைகுதும் இனிநாம், இவன் உடன்று நோக்கினன் பெரிது எனவும் வேற்றரசு பணிதொடங்கும் நின் ஆற்றலொடு புகழேத்திக் காண்டு வந்திசின் பெரும!’ எனவும் (புறம் : கன) அவன் அவையில் சிலநாள் வாழ்ந்திருந்த புலவர், அவன்பால் காணலாம் நலமெலாம் உணர்ந்தார் ; அவன் அறிவும், அன்பும், அருளும் உடையன்; அவற்றை அறிந்து காணல் அரிதாம் ; அத்துணேப் பெரியவாம் அவன் அறி வும், அன்பும், அருளும் கடலாழமும், ஞாலத்தகலமும், திசைகளும், ஆகாயமும் அளந்து காண ற்கு அரிய என்ப; அவற்றை அளந்தறிதலும் கூடும்; இவன் அறிவையும், அன்பையும், அருளேயும் அளந்தறிதல் இயலாது; அவன் நாட்டு மக்கள், சோருக்கும் தீயாலும், ஞாயிற்றின் ஒளி யாலும் உண்டாம் வெப்பம் அறிவரேயன்றி, பகைவர்தம் நாட்டைப் பற்றியக்கால் வைத்த தீயாலாம் வெப்பம் அறி யார்; அவர்கள் வானவில்லன்றித் தம்மை அழிக்கப்படும் பகைவர் கைவில்லைக் கண்டறியார் ; தம் கிலங்களை உழுதற் காம் நாஞ்சிற்படை அல்லது, தம் காட்டுமீது பகைத்து வருவார் ஏந்திய படையினப் பார்த்தறியார். பகைவர் காட்டைப்பற்றி அங்காட்டு மண்ணுண்டல்லது உணவு