பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குட்டுவன் கண்ணனுர்

தோற்றுவாய்

தமிழ், உலக மொழிகள் அனைத்திலும், உயர்தனிச் செம்மொழியாம் சிறப்பினேப் பெற்ற சீரிய மொழியாம். மக்கள், தம் உள்ளம் உணர்ந்த ஒரு பொருளைத் தாம் உணர்ந்தவாறே பிறரும் உணரும் வகை உணர்த்த மேற் கொண்ட பல்வேறு வழிகளுள், மொழியும் ஒன்றாம்; இன்று மக்கள் வழங்கும் மொழி, இன்றுள்ள நிலையினை, அது தோன்றிய காலத்திலேயே பெற்றுவிடவில்லை; இந்

கிலே உறுதற்கு முன்னர் அஃது அடைந்த மாறுதல்கள், அம்மம்ம சொல்லி முடியாது. r மக்கள் வாழ்வின் பண்பாட்டிற் கேற்பவே, அம்: மக்கள் வழங்கும் மொழியும் பண்பாடுற்று விளங்கும்;: மக்கள் இன்று பெற்றுள இந்நாகரிக விலையினை, அவர் தோன்றிய அக்காலத்திலேயே பெற்றிருந்தாால்லர். உண வைத் தேடவேண்டும்; அதை அறுசுவையுடையதாக ஆக்சு வேண்டும் என்ற அறிவினை அவர்கள் அன்று பெற்றிருந்தா ால்லர்; கிடைத்த காயையும், கிழங்கையும், கனியையும், காட்டு விலங்குகளின் இறைச்சியையும் கின்று காலங் கழிக்கவே கற்றிருந்தனர்; அழகிய மெல்லிய ஆடைகளை இன்று அணியும் இவர்கள், அன்று ஆடை கட்டவேண்டும் எனும் அறிவுதான்ும் பெற்றிருந்தால்லர்; இன்று அடுக் கிய மாடிகளில் மகிழ்ந்துறையும் மக்கள், அன்று, மரங்களை யும், மலைக்குகைகளையுமே தம் வாழ்விடமாக வகுத்துக் கொண்டிருந்தனர்.