பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"Q2 குட்டுவன் கண்ணணுர்

களே உதவும் வளம் செறிந்தது அங்கிலத்து மண் எனக் குறிஞ்சிநிலத்து நலத்தினேப் பாராட்டியுள்ளார் ஒரு பாடடில : -

  • கிழங்கு கீழ்வீழ்ந்து, தேன்மேல் தாங்கிச்

சிற்சில வித்திப் பற்பல விளைந்து தினேகிளி கடியும் பெருங்கல் நாடு.” (நற் : கூஉ அ)

வேட்டை மேற் செல்லும் கானவர், எதிரிகளைத் தப்பாது கொள்ள வல்ல நாய்கள் பின் தொடர, கொம்பை -ஊதி ஒலி செய்துகொண்டே செல்வர் என்றும், ஆண்டு, தன் வில்லாற்றல் காட்டிக் கொன்ற யானையின் கோட்டைக் கொண்டு, அங்கிலத்து மலையகத்தே மண்டிக் கிடக்கும் பொன்பெற அகழ்வுழி, பொன்னுடன், பேரொளி வீசும் மணிகளும் வெளிப் போதால் கண்டு வியந்து கிற்க, தன் கையுறை யானைக் கோடு, அகழ்ந்ததால் ஒடிய, அதி னின்றும் முத்துக்கள் உதிர, மணி, பொன், முத்து ஆகிய அம்மூன்றையும் அளவின்றிப் பெற்று, அவற்றை சந்தனக் கொம்பையே காவும் கோலாகக்கொண்டு சுமந்து கொணர் வன் என்றும், கானவர்தம் செல்வவாழ்வினைச் சிறக்கப் பாடியுள்ளார் :

' கோடு துவையாக் கோள்வாய் நாயொடு

காடுதேர் நசைஇய வயமான் வேட்டுவன்.”

(நற்: உஎசு)

பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய செறிமடை அம்பின் வல்விற் கானவன், பொருது தொலேயானை வெண்கோடு கொண்டு, நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன், கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப வைத்துதி வான்மருப்பு ஒடிய உக்க தெண்ணீர்ஆலி கடுக்கும் முத்தமொடு மூவேறு தாாமும் ஒருங்குடன் கொண்டு சாந்தம் பொறை மாமாக நிறைநார் ‘. . . . வேங்கைக் கண்ணியன் இழிதரும்.” (அகம் உஆஉ)