பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்க.ை நப்பண்ணனுர்

பண்ணன் எனும் இயற்பெயருடைய நம் புலவர், பெரும்புலமை உடையாாதல் அறிந்த அவர்கால மக்கள், சிறப்புணர்த்தும் 'ந'கர இடைச்சொல்லையும், உயர்வுணர்த் தும் 'ஆர்' விகுதியையும் முறையே அவர் பெயர்க்கு முன்னும் பின்னும் சேர்த்து வழங்கிப் போற்றுவாராயினர். கப்பண்ணனர் பரிபாடல் பாடிய புலவர்களுள் ஒருவராவர்; பாண்டிநாட்டிற் பிறந்தவர் ; தாம் பிறந்த பாண்டிநாட்டின் கண்ணதாய பாங்குன்றினேயும், அக்குன்றுறை குமரவேளி னேயும் பாராட்டிப் பணிவதோடு, அந்நாட்டுத் தலைநகராம் கூடன்மாநகரையும், அந்நாட்டு அரசனேயும், அவனேச்சூழ இருக்கும் அமைச்சர் முதலாயினுரையும் பாராட்டி மகிழும் பரும்பற்றும் உடையராவர். தாம் பாடிய பரிபாடற் கண், பாண்டிநாட்டுத் தலைநகராம் கூடலே, உலகத்துள்ளார் அனேவரையும் ஒருங்கே வெல்லவல்ல பேராற்றலும், பேரறிவும் உடையார்வாழ் கூடல் என்றும், பாண்டியனே அறிவானமைந்த அழகுடைப் பாண்டியன் என்றும், அவன் அமைச்சரைக் கடனறிந்த கண்போலும் அமைச்சர் என்றும் பாராட்டியுள்ளமை புணர்க.

புலத்தினும், போரினும் போர்தோலாக் கூடல்.’ புலமாண் வழுதி.” - * கடனறி காரியக் கண்ணவர்.”

(பரி: க.க : அ, உ0, உ.உ) லவர் கப்பண்ணணுர், தாம் பாடிய பரிபாடற்கண், திருப்பாங்குன்றத்தே கிகழும் திருவிழாக் காட்சிகளையும், அவ்விழாக் காணச்செல்லும் மக்களின் மனநிலையினையும் நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். பொருள்தேடிப் பெற்ற பாண்டிநாட்டு மக்கள், அப்பொருளால் பெறலாம் பேரின் பம்பெற வேண்டி, பாங்குன்றத்தே நிகழும் பெருவிழாக் காணச்செல்லும் செயல், அறம் செய்தார் அவ்வறத்தா லாம் பயன் பெறல்வேண்டி துறக்கம் புகுதலோடொக்கும் என உவமை காட்டியுள்ளார் புலவர் : . . . . . -