பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக. நரைமுடி நெட்டையார்

கரைமுடி கெட்டையார் எனும் இப்பெயர், புலவர்க்கு கபாதோ ஒரு காரணம்பற்றி வந்த பெயரே யாம் என்பதில் எட்டுணேயும் ஐயமில்லை எனினும், அக்காரணம் யாது என அறிந்து காணல் இப்போது அரிதாகிவிட்டது. புலவர் கரைமுடி நெட்டிமையார், காதற் சிறப்பும், கடமையின் உயர்வும் ஒருங்கே உணர்ந்த உயர் போாளராவர். கட மையிற் கருத்துடையார், உலகத்து அரியராவர்; ஆள்வினே மேற்கோடல் ஆடவர்க்கு அறளும் எனும் உணர்வு, உள் ளத்தே உரனுடையார்க் கன்றி உண்டாகாது ; அவ்வுணர்வு உண்டாதல், பொதுவாகவே அரிது எனின், காதலிற் கன்றிய உள்ளம் உடையார்பால், அக்கடமையுணர்வு உண் டாதல் அளிதிலும் அரிதாம்; காதல் உடையார், கடமை யுடையாதலும், கடமையுணர்வுடையார், காதல் உள்ள முடையராதலும் அரிது ; கடமையுணர்வுடையார்பால், காதல் உள்ளம் உண்டாகாது ; காதல் உள்ளம் உடையார் பால், கடமையுள்ளம் உண்டாகாது; இவ்விரண்டையும் ஒருங்கே உடையார் உலகத்தில் அரியராவர் ; முற்றிலும் முரண்பட்ட இவ்விரண்டினேயும் ஒருங்கே உடையார், மீளாத்துயருற்று மாள்வர்; அவர் உறும் துயரத்திற்கு எல்லை காணலும் அரிதாம்; என்ருலும், அவ்விரண்டினையும் ஒருங்கே உடையாரையே உலகத்தார், உயர்ந்தோர் எனப் போற்றுவர். செயற்கரிய செய்வாான்ருே பெரியார்? இதை உணர்ந்தவர் நம்புலவர் ; காதல், கடமை ஆய இரண் .டினும் கவருத் தலைமகன் ஒருவன், ஆள்வினே மேற் கோடல் ஆடவர் கடன் எனும் எண்ணம், தன்னைப் பொருள் தேடிப் போமாறு பின்னின்று துரத்த, காதலிபால் சென்ற தன் அன்புள்ளம், இத்தகையாளே, இப்போது பிரிந்து போதல் அறிவுடைமையன்று ; ஆகவே பிரியற்க என முன்னின்று தடுப்ப, செய்வதறியாது திகைத்து கின் முன். அவன் நிலை, உள்ளே துளேபொருங்கிய ஒரு மூங்கில், இரு பாலும் தீப்பற்றி எரிய, அதன் உள்ளே அகப்பட்ட எறும் பொன்று, னப்பாலும் போகமாட்டாத இருந்து வருந்து