பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 குட்டுவன் கண்ணனர்

இவ்வாறு, இன்றுள்ள நிலைக்கும், அன்றிருந்த கிலேக் கும் இடையே மக்கள் வாழ்வில் எத்தனே வேறுபா ண்ேடோ, அத்தனே வேறுபாடு அன்று அவர்கள் வழங்கிய மொழிக்கும், இன்று வழங்கும் மொழிக்கும் இடையில் உண்டாம். அன்று வழங்கிய் மொழி, தன் திருந்தாகிலே ஒழித்து, இன்றுள்ள இச்சீரிய செம்மை நிலையினேப் பெறு தற்கு, அது எத்தனையோ நூற்ருண்டுகளைக் கடந்து வக் தளது. இவ்வாறு பன்னுாருண்டு காலம் கழித்தே பெற லாகும் அப்பண்பாட்டினேத், தமிழ்மொழி, இன்று நேற்றுப் பெற்றுவிடவில்லை. இன்று நாகரிகத்தின் பிறப்பிடமாம் எனப் போற்றப்பெறும் நாட்டினரெல்லாம் காட்டு மிராண்டி வாழ்வினாய் வாழ்ந்த அக்காலத்திலேயே பெற்றுவிட்டது எனின் தமிழ்மொழியின் பழைமையும், பெருமையும்தான்் என்னே !

இவ்வாறு சிறப்பளிக்கும் செந்தமிழ்மொழிக்குச் சிறப்பளித்து கிற்கும் நால்களாய பத்துப்பாட்டு, எட்டுத் தொகை முதலாம் பழந் தமிழ் நூல்களைப் படித்துப் பய லுறல் மக்கள் கடன் என அறிந்து, அந்தாலே ஆக்கித் தந்த ஆசிரியப் பெருமக்களின் வரலாற்றினை விரித்துரைக் கத் தொடங்கிய தொண்டில், இந்நூல் பதினேந்தாவது ஆம். இதற்குமுன், கபிலர், பரணர், நக்கீரர், ஒளவையார், பெண் பாற்புலவர்கள், உவமையாற் பெயர் பெற்ருேர், காவல் பாவலர் கள், கிழார்ப்பெயர் பெற்றேர், வணிகரிற் புலவர்கள், மாநகர்ப் புலவர்கள் 1, 2, 3: உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றேர், அதியன் விண்ணத்தனுர் என்ற பல்வேறு தலைப்பின்கீழ்ப் பல புலவர்களின் வரலாறு விரித்து உரைக்கப்பட்டுள்ளன; இந்நூற்கண், குட்டுவன் கண்ணனுர் முதல்வராக எண் பதின்மர் வரலாறு விளக்க முன்வந்து, முதலில் கிற்கும் அக்குட்டுவன் கண்ணனர் பெயரையே நாற்பெயர்ாக அமைத்துள்ளோம்.