பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.உ. நல்லச்சுதனுர்

அச்சுதன் என்பது கிருமாலின் திருப்பெயர்களுள் ஒன்று ; அப்பெயருடைய இவர், வைணவ சமயமே விளங் கிய சமயமாம் எனும் குறுகிய உள்ள மிலராய், சைவசமயச் சார்புடைய செவ்வேளைப்பாடும் பெரும் நன்மையுடைய ாய்க் காணப்பட்டமையின், நல்லச்சுதளுர் எனச் சிறப் பிக்கப் பெற்றுளார். பரிபாடலில், முருகனுக்குரிய இருபத் தோராவது பாடல் இவர் பாடியதாம் ; பரிபாடலில் வரும், 16, 17, 18, 20-ஆம் பாடல்களுக்கு இசை வகுத்தவரும் இவரே.

நல்லச்சுகளுர், காம் பாடிய பரிபாடற் ருெடக்கத்தே, முருகன் ஊரும் யானே, பூண்ட காற்செருப்பு, ஏந்திய வேல், அணிந்த கடப்பந்தார், அமர்த்திருக்கும் பாங்குன்று ஆகியவற்றின் இயல்புகளே அழகுறப் பாடியுள்ளார்.

ஆடும் விறலி, அவள் ஆடல்கண்டு மயங்கும் ஒரு தலைவன், அவன் செயல்கண்டு சினக்கும் அவன் மனேவி, தன் கணவன் பிறரை நோக்காது, கன்னேயே நோக்குமாறு விரும்பி அவள் மேற்கொள்ளும் ஒப்பனே ஆகியவற் றையும் பாடியுள்ளார் புலவர்.

மேகம் ஒலிக்க ஆடும் மயிலின் விரிந்த தோகைகள், சாந்தாற்றும் சிவிறிகள் போலும் , தம்பிகள் மலர்களிற் படிந்து ஊதுங்கால் எழும் ஒலி குழலோசை போலும் ; வண்டோசை, யாழோசை போலும் ; அருவி விழுதலால் எழும் ஒலி, முழவொலி போலும் எனப் புலவர் கூறுவன, அவர்தம் இசையறி உணர்வினே உணர்த்துவனவாம். - மைந்தர் மகிழ்ந்து மார்பிற் பூசிய சந்தனத்தைத் தடவிப் புலர்த்திமீளும் காற்றும், மகளிர் காது உதிரச் சூடியபூ நிறைந்த கூந்தலினூடே நுழைந்துவரும் காற்றும், முருகனை வழிபடல் குறித்துக் காட்டிய தூபப் புகையினை த் o, தழுவிவரும் காற்றும் கலந்து மணக்கும் மாண்புடையது .

திருப்பாங்குன்றம் என்றும் பாடி மகிழ்கிருர் புலவர்.