பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடு. நல்லெழுனியார்

தகர்ே ஆண்ட அதிகமான் நெடுமானஞ்சியின் வழி வந்தார், எழுனி' என அழைக்கப்பெறுவர்; நல்லெழுனி யாரும் அவன் வழிவந்தவராதல் வேண்டும். திருமாலைப் பாராட்டி இவர் பாடிய பாட்டொன்று பரிபாடற்கண் இடம் பெற்றுளது.

கார்ப்பருவம் வந்துற்றதாக, கருத்து எழுந்த பெரிய மேகத்தைத், கிங்களும் ஞாயிறும் இருபாலும் இருந்து அணிசெய்வதேபோல், சங்கும் சக்காமும் இருபுறமும் விளங்க ஏந்திய கைகளையுடைய திருமால், எனப் புலவர் காட்டும் திருமால் காட்சி, சிலப்பதிகாரத்தே அடியார்க்கு நல்லார் காட்டும்,

விரிகதிர் ஞாயிறும், திங்களும் விளங்கி இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தான்த்து மின்னுக் கோடி யுடுத்து, விளங்குவில் பூண்டு நன்னிற மேகம் கின்றது போலப் பகையணங்கு ஆழியும், பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் எக்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம் பூவாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன்” (சிலம்பு : க.க. சங் நிகர் காட்சியோடொத்து கவின் சிறந்து தோன்றுதல் காண்க.

  • பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த இருவேறு மண்டிலத்து இலக்கம் போல நேமியும் வளையும் எந்திய கையால் கருவி மின் அவிர் இல்ங்கும் பொலம்பூண் அருவி உருவின் ஆரமொடணிந்த சின் திருவரை அகலம்.” (பரிபாடல்: கங்: எ கஉ):