பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசு. நல்வெள்ளியார்

இவர் பெயர், கல்வெள்ளியார் எனவும், மதுரை நல் வெள்ளியார் எனவும், நல்லொளியார் எனவும் பலவாறு காணப்படும். வெள்ளியார் என்ற பெயரை நோக்கி, இவரைப் பெண்பாற் புலவர் என்று சிலர் கருதுவர் ; சுக்கிரனுக்கு வெள்ளி என்பதும் பெயராம் என்பதை நோக்கின், இவரைப் பெண்பாலர் என்றே கொள்வது அத்துண்ேப். பொருந்தாது என்பது விளங்கும். இவர் பாடியனவாக, நற்றினேயில் இரண்டு பாடல்களும், குறுங் தொகையில் ஒன்றும், அகத்தில் ஒன்றுமாக நான்கு. :பாடல்களT 2.5 fெ.ை -- -

தலைவர் சென்ற காட்டில், வானம் இன்னே பெய்ய மின்னும்; ஆதலின் வருவர் எனத் தலைமகளைத் தேற்றும் கோழி கூற்றும், அன்னே வெறியாடினுள் எனத் தலைவற்குக் கூறி வாைவொடு வரவேண்டுவோமாக எனத் தலைமகன் கேட்கத் தோழிகூறும் கூற்றும், நீ வருந்துணையும் வருந்தி. வாடினுள் தலைவி எனும் தோழி கூற்றும், அறத்தொடு கிற்கும் தலைமகள் கூற்றும் தோன்ற அவர் பாடிய பாடல் கள் படித்தற் கினியனவாம். - - - - 'எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருளுள்ளும் செல்வர்க்கே செல்வந்தகைத்து’ என்றதை உட்கொண்டு,

தலைவன்பால் தோன்றிய பணிவுடைமையினைப், ! புரவலன் - போலும் தோற்றம் உறழ்கொள, இரவல் மாக்களிற் பணி மொழி பயிற்றி” (அகம்: நடவ.) எனக் கூறுவதும், அன்பால் உருகும் உள்ளத்திற்கு மழைபெய்யக் கரைந்த மண்ணே உவன்மயாக்கி, இடுபெயல் மண்ணின்ஞெகிழ்பு அஞர் உற்ற என் உள்” எனக் கூறுவதும் நயம் செறிந்து காணப்படும். (அகம் : க.உ.) . . . . . . . - . . .