பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சன். நற்றங்கொற்றனுர்

குறிஞ்சித்தினை தழுவிய நற்றினேப் பாட்டொன்று, கற்றங்கொற்றனர் பாடியதாகக் காணப்படுகிறது என்ப தல்லது இவர் வரலாருகப் பிற எதுவும் அறிதற்கில்லை. களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுகும் தலைவன், இடை விடையே பிரிந்துபோவதால், தான்் வருந்துவதையும், அவ்வருத்தக் கால் தன் நலம் கெடுவதையும், அவனுக்கு உணர்த்தி, விரைந்து வந்து வரைந்துகொள்ள விரும்பும் தன் விருப்பத்தினை அவனுக்கு அறிவிக்க விரும்பிய தலைவி, ஒருநாள் அவன் தன் வீட்டின் புறத்தே வந்துளi ன் என்ப கறிக் து, அவன் கேட்குமாறு, தன் தோழியை முன்னிலைப் படுத்தி, கோழி அழகிய வேலைப்பாடமைந்த கோள்வளை வேண்டி, அது பெருமையால் அழுதேனுக நம் தந்தை, நம் தலைவன், நம்மைவிட்டு இடையிடையே பிரிந்துபோய் விடுதலை அறிந்தான்்போல், யான் வெறுத்துக் கழற் றினுலும் கழலாததும், சிறிது நெகிழினும், தான்் கிற்க வேண்டும் இடம்விட்டு நீங்காததுமாய மிகச் சிறிய வளை வினேச் செய்து, செறித்து, தலைவன் பிரிவால் உண்டாம் நம் தோளின் துவட்சி, பிறர்க்குப் புலனுகாவாறு செய்து விட்டான்,” என்று கூறினுள் எனப் பாடிய பாட்டு,

பொருள் இன்பம் பயந்து பொலிவுற்று விளங்குகிறது.

புலவர் பாடிய பாட்டு, அவர் ஒரு கைதேர்ந்த மருத்துவர் ; மருத்துவத் தொழிலை மாசறக் கற்றவர் என்பதையும் நமக்குப் புலனுக்குகிறது : “ நோய் காடி, நோய் முதல்நாடி, அது தணிக்கும் வாய்காடி வாய்ப்பச் செயல்; உற்ருன் அளவும், பிணி அளவும், காலமும் கற்ருன் கருதிச் செயல். இவை வள்ளுவர் கண்ட மருத்துவ முறை; இம்முறையினை நன்கு அறிந்தவர் நம் புலவர் ; தீர்தற்கரிய நோயுடையான் ஒருவன், அதைத் தீர்க்கவல்ல மருத்துவன் ஒருவன்பால் சென்று, ஐயா t எனக்கு வந்துள்ள நோய்இது ; ஆயினும், நான் வேண்டும் ன் மருந்து இது ; ஆகவே அதைத் தருக!” என வேண்