பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 குட்டுவன் கண்ணனர்

.டின், மருத்துவன், அவன் வேண்டும் மருந்தை அளிக்காது, அவன் நோயறிந்து, அக்ரோய் போதற்காம் அரிய மருந்து ..எது என ஆராய்ந்து அம்மருந்தினேயே கொடுப்பன் ; கொடுத்தல் வேண்டும் ; அவ்வாறு கொடுப்போனே நல்ல மருத்துவருவன்; மருத்துவத் தொழிலின் இன்றியமையாச் சிறப்புடைய இவ்வுண்மையினேப் புலவர் நன்கு அறிக் துள்ளார் ; தன் மகள், அழகிய தோள்வளே வேண்டினுளா யினும், அதைத் தாாது, அவட்கு அப்போது வேண்டுவது அவள் கையினின்றும் கழலாச் சிறு வளைகளே என அறிந்து அவற்றை அளித்த தந்தை செயல், கன் மருத்துவன் செயல் போலாம் என உவமை காட்டியதிறம், புலவர்தம் புலமைக்கும், அவர்தம் உலகியல் அறிவிற்கும் பெருமை யளித்து கிற்கிறது :

' கிருந்துகோல் எல்வளை வேண்டி யான் அழவும்,

அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது, மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல, என்னே வாழிய பலவே! பன்னிய மலேகெழு நாடனெடு நம்மிடைச் சிறிய தலைப்பிரிவுண்மை அறிவான் போல் ப்ேப நீங்காது, வரின் வரை அமைந்து, தோட்டழி மறைக்கும் உதவிப் போக்கில் பொலந்தொடி செlஇயோனே.”

(ாற்: கங்க)