பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. குட்டுவன் கண்ணனுர்

குட்டுவன் என்பது, சோர் குடிப்பெயர்களுள் ஒன்று; தம் காட்டின் ஒரு பகுதியாய குட்ட நாட்டிலும் தம் கோலோச்ச ஆளும் சிறப்பால், சேரர், குட்டுவர் என அழைக்கப் பெறுவர். சோர் அனைவரும் அப்பெயரால் அழைக்கப் பெறுதலோடு, அப்பெயரைத் தம் பெயரோடு சேர்த்து வழங்கிச் சிறப்புறுதலும் உண்டு; குட்டுவன் கோதை, சோன் செங்குட்டுவன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பார் பெயர்களே நோக்குக. குட்டநாடு, செந்தமிழ்நாட்டைச் சேர்ந்த பன்னிரு நாடுகளுள் ஒன்று; மேலேக் கடற்கரையினைச் சார்ந்து கின்ற அங்காட்டார், தாயைத் தள்ளே எனப் பெயரிட்டு அழைப்பர் என உரை யாசிரியர்களால் உணர்கிருேம், அக்காட்டிற் பிறந்தமை யாலோ அன்றி, அக்காடாள் உரிமையுற்ருேராய சேரர் குடியில் வந்தமையாலோ, அன்றி, அக்காட்டினின்றும் போங் கார் குடியிற் பிறந்தமையாலோ, கண்ணனுர் எனும் இயற்பெயர் உடையாய கம்புலவர், குட்டுவன் கண்ணனர். என அழைக்கப்பெற்றுளார். புலவர் பாடிய பாட்டாகக், குறுக்தொகைக்கண் ஒரு செய்யுள் காணப்படுகிறது.

மக்கள் அணுகலாகா அருவரைகளிடத்தே தேனிருல் தொங்கும்; அத்தேனிமுல் கிழிந்து பாழுறுமாறு உயர்ந்து வளரும் மூங்கில்; அம்மூங்கில் அழியுமாறு, அதன் முளை யினைத் தின்று உயிர்வாழும் யானே; யானேயால் பாழான மூங்கிற் காடுகளுக்கிடையே அமைந்து கிடக்கும் கானவர் தம் சிற்றார் எனக் காட்டின் இயற்கை வளத்தையும், கானவர்க்குரிய அக்காட்டில் பிற கிலத்தார் வந்து வேட்டை பாடலும் உண்டு; அவ்வாறு வேட்டம் புரிந்தார், உடன் வரும் நாயும் தாமும் இளேத்த கிலேயில், வேற்று கிலத்தி மனின் அம் வந்து வேட்டம் புரிக் தனரே என அவர் மீது சினம் கொளல் ஒழிந்து, அவரை அணுகி ஐய வந்த அம் தொழில் முடிந்துவிட்டதாயினும், விேரும் இளேத்துக் காணுகின்றீர்: நம் பின்வரும் நாய்களும் இளைத்துவிட்