பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ. நற்றமனுர்

நற்றமஞர் பாடிய பாட்டொன்று நற்றிணைக்கண் இடம்பெற்றுளது. மணம்புரிதற்காம் பொருள்வேண்டிப் பிரிந்துசென்ற தலைமகன் விரைந்து வந்திலன்; அதனல் வருந்தினுள் தலைவி ; கைவளை கழன்று போமாறு தோள்கள் மெலிந்துவிட்டன; கண்கள் ஒளிகுன்றி அழ கிழந்துவிட்டன : நெற்றியில் பசலையும் பாய்ந்துவிட்டது ; தலைமகளின் இயல்பறிந்த ஊரார், அலர்துாற்றிப்பழிக்கவும் தொடங்கிவிட்டனர்; அவர் அலர்கேட்டுப் பெரிதும் வருங் தினுள் தலைவி ; அவள் துயர் துடைக்க விரும்பிய தோழி, பிரிந்துசென்ற நம் தலைவர், நம்மாட்டுப் போன்புடையர் ; ஆகவே, அவர், நாம் வருந்த நெடிதுநாள் கில்லார் ; விரைவில் வந்தருள்வர்; வருந்தற்க எனக் கூறினுள் ; தோழியின் இவ் அன்புரை, தலைவியின் உளத்துயரை ஒரளவு போக்கிற்று ; அதனுல் சிறிது மகிழ்ந்த தலைவி, தோழி ! தலைவர் வருவர் எனக் கூறிய கின் சொல், வெப்பம் மிக்க உலையில், கொல்லன், பனமடல்கொண்டு தெளித்த சிலவாயநீர், அவ்வுலே நெருப்பை அடியோடு அழிக்காது எனினும், சிறிதாவது அழித்தலைப்போல், என் துயரை ஒரளவு குறைத்தது ; நீ வாழ்க!” எனக் கூறி ஆாழ்த்தினுள். தலவியின் இக்கூற்றினேப் புலவர் மிகவும்

றம்படப் பாடியுள்ளார்.

' தோளே தொடி கொட்பு ஆன கண்ணே

வாளிர் வடியின் வடிவிழந்தனவே; அதுதலும் பசலை பாயின்று...என்று வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை தாற்ற காமுறு துயரம் செய்யலர் என்னும் காமுறு தோழி! காதலங் கிளவி, இரும்புசெய் கொல்லன் வெவ்வுலேத் தெளித்த தோய்மடற் சின்னிர் போல நோய்மலி நெஞ்சிற்கு எமமாம் சிறிதே. (நற்: சங்ங்)