பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக. நாகம்போத்தனுர்

போத்தன் என்பது புலவர்தம் இயற்பெயர் ; நாகன், அவர் தந்தை பெயர் ; போத்தனூர் எலும் பெயருடைய ஒருர், கோவை மாவட்டத்தில் உளது. புலவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது. வினேமேற்கொண்டு பிரியக் கருதிய தலைமகன் ஒருவன், கார்காலத் தொடக்கத்தே வருவன் எனக் கூறிச்சென்ருன், அவன் சொல்லைத் தேறி ஆற்றியிருந்தாள் தலைவி ; கார் காலம் தொடங்கிவிட்டது , செம்மண் புழுதி கிறைந்த மேட்டு கிலத்தே வளர்ந்து, காற்ருல் அலைப்புண்டு கிடக்கும் வாகின் இலையை, நாட்காலத்தே வந்த மான் குட்டியொன்று கடித்துத் தின்பதைக் கண்டாள் ; அதனல் கார்காலம் வந்துவிட்டது என்பதைக் கண்டு கலங்கினுள் ; தலைவியின் கலக்கம் கண்ட தோழி, அவளே அடுத்து, தோழி! நீ காணும் இக் கார்காலக் காட்சி, தலைவர் சென்ற நாட்டின் கண்ணும் உண்டு ; அவற்றைக் காணும் அவர், இக்காட்சியைக் காணும் தலைவியின் கைவளே கழன்று உகாமையோ அரிது என எண்ணுவர் ; ஆகவே, அவர் நில்லாத வருவர்; வருந்தற்க,” எனக் கூறித் தேற்றினுள். தோழியின் கூற்றினேப் பாட்டாக்கித் தந்துள்ளார் புலவர் : செவ்விகொள் வாகின் செஞ்சுவல் கலித்த - கெளவை காற்றின் கார்இருள் ஒர்இல கல்வி காண்மறி கவ்விக் கடன் கழிக்கும் காரெதிர் தண்புனம் காணின் கைவளே

சோர்குவ..அல்ல அன்பர்கொல் சமாே.”

(குறுக் உ.அ.உ)