பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஉ, நெய்தற் கார்க்கியன்

கவுதமன் என்பதேபோல், கார்க்கியன் என்பதும் ஒரு முனிவர் பெயராம் ; அவர் பெயர், நம் புலவர்க்கும் இடப் பெற்றுளது ; தாம் பாடிய பாக்கள் தோறும், குறிஞ்சி ஒழுக்கமே சிகழ, நெய்தற் கருப்பொருள் தந்து பாடிய சிறப்பால் புலவர் நெய்தற் கார்க்கியன் என அழைக்கப் பெற்றுளார்.

தலைவன் குறைமுடிப்பதாக வாக்குமதி அளித்து வந்த தோழி, தலைவிபாற் சென்று, தோழி தலைவன் ஏறிவந்த கொடிஞ்சியொடு கூடிய நெடிய தேர், மணி ஒலிக்க வந்தது எம்மைக்கான நம்மைக் காணவந்த அத் தேரை, நாம் ஏற்றிப் போற்றியிருத்தல் வேண்டும் , தம்மை நோக்கி வருவார்தம் குறையைப் போக்கித் துணை புரிதல் தகுதியுடையார்தம் தலையாய கடனும் , அதனே பாம் செய் திலேம் ; அதனுல் நாணம் இழந்தோம் நாம் ; இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கலாற்ருக்கால் தன் மெய் துறத்தலே தலையாய அறமாம் ; அதையும் நாம் செய்தி லேம் ; நம் செயல் எனக்கே பெரிதும் வருத்தமாயுளது ; கின்பாற்கொண்ட அவன் காமம் அளி பெருமையான் அழிந்துவிடுமோ எனவும் அஞ்சுகின்றேன் ' என்றெல் லாம் கூறி அவனே ஏற்குமாறு செய்தாள். தோழியின் இக் கூற்றினேப் பாட்டாக ஆக்கியுள்ளார் புலவர் :

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்

தெண்கடல் அடைகளைத் தெளிமணி ஒலிப்பக்

காணவந்து காணப் பெயரும் ;

அளிதோ தான்ே காமம் ,

விளிவது மன்ற கோகோ யானே.” (குறுந் : உக உ)

தலைவன் வரைந்து கொள்ளாமல் தனித்து வாழும் வாழ்வு தாங்கற்கரிய துயர் உடையது ; அவ் வாழ்வில் நெடிதுநாள் வாழலும் இயலாது என்பதைத் தலைவி தன் ஊரின் மேலேற்றிக் கூறினுள். எனப் பாடிஞர்:

'இன்ன உறையுட் டாகும்

சின்னுட்டு அம்ம இச்சிறு நல்லுரே ' (குறுங் : திடு):