பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக. பக்குடுக்கை நன்கணியார்

நன்கணியார் என்பது புலவர்தம் இயற்பெயராம். இவர் பெயர்க்கு முன்வரும் பக்குடுக்கை யெனும் சிறப்பு, புலவர்தம் ஊர்ப் பெயரைக் குறிப்பதாம் என்று கொள்வர் சிலர் ; பக்கு என்பது பை எனப் பொருள்படும் ; புலவர் முற்றத் துறந்த முனிவராதலின், பையையே உடையாகக் கொண்டிருக்தனர்; அதனுல், பக்குடுக்கை எனும் அடை, இவர் பெயர்க்குமுன் கொடுக்கப்பட்டுளது என்று கூறுவர் மற்றும் சிலர் : " ஒருவருக்கு உடுப்பவை இாண்டாக வேண்டியிருப்பவும், ஒன்றையே இரண்டாகப் பகுத்துக்ே கும் காரணத்தில், பக்குடுக்கை நன்கணியர் எனப்பட்டார் என்றற்கும், ஒருவரது வறுமைகிலேயைப் பக்குடுக்கை யெனச் சிறப்பித்துரைத்த ஏலங்கண்டு, சான்ருேர் இவ் வாறு சிறப்பித்துப் பாராட்டினர் என்றற்கும் இடலுண்டு' எனது எழுதுவசரும உளா,

உலகம் தோன்றியாள் தொடங்கி இன்று வரையி லும், உலகில் போர் ஒய்ங்கிலது ; போர் சிகழாத வாட் டையோ, அது நிகழாத காலத்தையோ கால்ை அரிது ; எங்கும் போர் ; எப்பொழுதும் போர்; காரணம் என்ன ? மக்களிடையே கானும் மன வேற்றுமையே, அம்மன வேற்றுமை என் உண்டாயிற்று அவ் வேற்றுமையை உண்டாக்கி வளர்ப்பது எது அதற்கு எத்தனையோ கா ணங்களைக் காட்வேர் அறிஞர் ; ஆயினும், காம் வாழும் இவ்வுலகம், பொருளே அடிப்படையாகக் கொண்டு இயங்கு வது என்ற அறிவுக்கண்கொண்டு நோக்குவார்க்கு, மக் கள்தம் மனவேற்றுமைக்கு, அம் மக்களிடையே நிலவும் பொருள் வேற்றுமையே தலையாய காரணமாம் என்பது எளிதிற் புலப்படும்; ஒருவன் செல்வத்தில் செழிக்கின் முன் , மற்றொருவன் வறுமையில் வாடுகின்மூன் ; ஒருவன் மாடிவீட்டில் வாழ்கின் முன் , மற்றொருவன் மண்குடிசை பும் பெறமாட்டாமல் மண்ணிற் கிடந்து புரள்கின்ருன் ; ஒருவன் பட்டாடை புனேகின் முன் , மற்றொருவன் பழங்,