பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுச. படைமங்க மன்னியார்

படைமங்க மன்னியார் என்பது இவர் இயற் பெயரா? அல்லது காரணப் பெயரா? இது காரணப் பெயராயின், இது ஏன் அவருக்குப் பெயராயிற்று அவர் இயற்பெயர் என்னுயிற்று இவ்வினுக்களுக்கு விளங்க விடையளித்தற்கு இல்லை. அவர் இயற்பெயர் மறைந்துவிட்டது ; இது அவர் காரணப் பெயர் : தன்படைமுழுதும் கெட்டவிடத் தும், தளராது நின்று போராற்றி வென்ற வீரன் ஒருவனேப் படைமங்க மன்னியான் எனப் பாராட்டிய சிறப்பால், இவர்க்கு இப்பெயர் உண்டாயிற்று எனக் கூறுவர் சிலர். இவர் பாடிய மகட்பாற் காஞ்சி மகிழ்தற்குரியது.

நாரைகள், மருதமாக்கிளைகளில் வாழ்வதை வெறுப் பின், காஞ்சிமாக்கிளேகளில் சென்று தங்கும் என்று கூறி, காரை வாழ்தற்காம் நீர்வளமும், மாம்பல வளர்தற்காம் மண்வளமும் உடையது எனத் தோன்றச்செய்யும் திறங் கண்டு மகிழ்க.

'தெண்ணீர்ப், பொய்கைமேய்ந்த செவ்வரி நாரை

தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின், காமரு காஞ்சித் துஞ்சும்.” (புறம்: உடுக)

வருவார்க்கு வரை யாது வழங்கும் எயினன் என்ற

வள்ளல் ஒருவனேயும், கலம்பல பெற்றுச் சிறந்த வாகை

என்ற பெயருடைய அவன் ஊரையும் புலவர் கம்பாட்டில் பாராடடியுளளாா :

' என்றும் வண்கை எயினன் வாகை அன்ன

இவள் நலம். ' (புறம் : கூடுக)