பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 குட்டுவன் கண்ணஞர்

உன; பொழுதும் போய்விட்டது; ஆகவே, இன்று எம். ஊர் செல்வதொழிந்து, எம் ஊரில் தங்கிச் செல்வீராக ' என்று வேண்டி கிற்கும் அன்புடையராவர் அக்கானசு காட்டார் எனக் கானவர்தம் வாழ்வியலையும் வனப்புறக் காட்டும் பாட்டொன்று புலவர்க்குப் பெருமையளித்துக் திகழ்கிறது.

' கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,

எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; செல்லல்; ஐஇய! உது எம் ஊரே, ஓங்குவரை அடுக்கத்துத் தீக்தேன் கிழித்த குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப் பேதை யானை சுவைத்த கூழை மூங்கில் குவட்டிடை யதுவே.” (குறுக் கஎன்