பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுடு. பதுமனுர் பதுமனர், பெரும்பதுமனர், மீளிப் பெருமதனர்

எனவரும் புலவர் தம் பெயர்களில் வரும் பதுமஞர் எனும் சொல், அப்பெயருடைப் புலவர்கள், சைனசமயத் தொடர் புடையராவர் என்பதை உணர்த்தும் என்ப.

தலைவன் பிரிவுத் துயரால் வருந்தி உறக்கம் ஒழிக் கிருந்த ஒரு தலைவி, இரவெல்லாம் கண்விழித்துக் காத் திருப்பவள், இடை இரவு மிக்க இருளே உடையதாக உளது; என் துயர் அறிந்து போக்க வேண்டிய தாயும், தமரும் அக்கவலை இலாாய் இனிது உறங்குகின்றனர்; உலகத்து உயிர்கள் எல்லாம் தம் உணர்வு இழந்து ஒருங்கே உறங்குகின்றன ; என் உயிர் போன்ருளாய தோழியும் உறங்கி விட்டாள்; இங்கிலையில் உறங்காதிருப்பவள், உறுதி யாகக் கூறுகிறேன், யான் ஒருத்தியே என்று கூறி வருந் தினுள் எனப் பொருளம்ையப் பாடிய புலவர் பாட்டு, சிறுசிறு சொற்ருெடரான் ஆக்கப்பெற்று அழகுற்று அமைந்துளது.

' கள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து

இனிது அடங்கினரே மாக்கள் ; முனிவின்று நனந்தலே உலகமும் துஞ்சும் , ஒர்யான் மன்ற துஞ்சா தேனே.” - -

(குறுங் : சு)