பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு.ை பறநாட்டுப் பெருங்கொற்றனுர்

பெருங்கொற்றனர் எனப் பெருமையாக அழைக்கப் பெறும் புலவர்க்குரிய நாடாகக் கூறப்படும் பறநாடு குறித்து எதுவும் தெரிந்திலது ; இவர் பாடிய பாட். டொன்று நெடுந்தொகை வித்திலக்கோவையில் இடம் பெற்றுளது.

கார்காலத் தொடக்கத்தே வருவேன் என உறுதி கூறிச் சென்ற தலைவன் விரைவில் வந்திலனே என வருந்தி கின்ற தலைவியின் வருத்தத்தினைப் போக்க எண்ணிய தோழி, வேனிலின் இறுதிக்காலத்தே, கார்மேகம் கால் வீழத்தொடங்குவதைக் காட்டிக், கார்காலம் தொடங்கும் காலம் அண்மையில் உளது; ஆகவே அவர் விரைவில் வந்துவிடுவர் ; வருந்தற்க என்று கூறுவாள், கணவன் வரும்வரை ஆற்றியிருப்பதே கற்புடை மனேவியர்க்குக் கடனும் என்பதை அவட்கு அறிவூட்டுவான் வேண்டி, அவளைக் கற்பான் மேம்பட்ட தலைவியே!' என விளித்து, ' பலாவும், மூங்கிலும் செறிந்த மலைச்சாரல் களில், யானைகள் கூட்டமாகச் செல்வதைப் போல், ஞாயிறு மறையுமாறு பாவி எழுந்து, பாம்பின் படம் அழிய இடித்து, ஆலியும் அழிதுளியும் கொண்டு, கின் புயல்போல் கறுத்த மேகம் கால் இறங்கிவிட்டது; இனி, இவ்வூரார் கூறும் அலருரை அடங்குமாறு காதலர் வந்து சேரு வர் ; மெல்ல நடந்துவந்து, கால் இறங்கிய மேகக் காட்சி யினேக் காண்பாயாக,” என்று கூறினுள் என்ற கருத் தமைய வந்துளது புலவர் பாடிய அப்பாட்டு. (அகம்:

உஉங்)