பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஅ. பனம்பாரனுர்

ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் அளித்த பெருமை உடையவரும், "வடவேங் கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் ” எனத் தமிழகத்திற்கு எல்லைவகுத்துக் காட்டியவருமாய பனம்பாானுர் ஒருவர் உளர் அவர் அகத்தியனுர் மாண வருள் ஒருவராவர்; தொல்காப்பியனுரோடு ஒருங்கிருந்து கற்றவர் என்றெல்லாம் கூறப்பெறுவர்; அவரும், குறுங் தொகை ஐம்பத்திாண்டாம் செய்யுளைப் பாடிய புலவர் பனம்பாாஞரும் ஒருவரோ வேருே உறுதியாகக் கூறு தற்கில்லை.

தலைவன் வரைவு வேண்டிவா, அவனேத் தமர் ஏற்றுக்

கொண்டதை அறிந்து மகிழ்ந்த தலைவி.பால், 'தோழி ! இன்றைய இம்மகிழ்ச்சிக்கு யானே காரணம் , ஊரார் கூறும் அலர் உாையினேக் கேட்டும், அன்னே, இற்செறி க் தும் வெறியாட்டெடுத்தும் கொடுமை செய்வது கண்டு, அணங்கால் வருந்தியவளைப்போல் நீ வருந்துவது கண்டு, யானும் வருக்கி, சிறிதுசிறிதாக, நம் களவொழுக்கம் நம் தமர்க்குப் புலனும் வண்ணம் அறத்தொடு கின்றேன் ; அதன் விளைவே, இன்று, கமர் தலைவனே வரைவேற்றுக் கொண்டது ' என்று கூறினுள். துணைபுரிந்த கோழியின் கூற்றினப் பாட்டாக்கித் தந்துள்ளார் புலவர் :

'ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பில்

சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே, நாந்தம் காறும் குவையிருங் கூந்தல்

கிரந்திலங்கு வெண்பல் மடங்தை பரிந்தனென் அல்லனே இறை இறையானே.” -

(குறுங் நிஉ).