பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுo. பார்காப்பான்

உலகநாதன் என்பதேபோல்,பார்காப்பான் என்பதும், திருமாலுக்குரிய பெயர்களுள் ஒன்றுபோலும்; அப் பெயருடையாய நம் புலவர், பாரகாபான் என்றும், பாாகாபான் என்றும், பாரகாபான் என்றும் பலவாறு அழைக்கப்பெற்றுளார் என ஏடுகள் எழுதுகின்றன. இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம்பெற் ஆறு Tெது.

" தோழி! கார்காலத் தொடக்கத்தே மலரும் இயல் புடைய கோங்கும் முதல்மலர் மலர்ந்துவிட்டது ; பொருள்வயிற்சென்ற தலைவர் வந்து விட்டார் என அறிவிக்க முன்வரும் தூதுவரும் வங்கிலரே என்ளுேடு துயிலுதலையும், துயிலுங்கால் அவர்க்கு அணையாகிப் பயன் தரும் என் கூந்தலையும் அவர் மறந்துவிட்டார் போலும் ” எனக் கூறி வருந்தினுள், தலைவனைப் பிரிந்து தனித்துத் துயருறும் ஒரு தலைமகள் எனப் பாடியுள்ளார் புலவர் :

கோங்கின் தலையலர் வந்தன ; வாரா தோழி! துயிலின் கங்குல் துயில் அவர் மறந்தனர்; பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார் ; செய்பொருள் கால் நசைஇச் சென்முேர் எய்தினால் எனவரூஉம் தாதே.” (குறுக் : உடுச)