பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.க. பாலாசிரியர் நப்பாலனுர்

பாலஞர் என்பது இவரது இயர்பெயர் : , சிறப்பு இடைச்சொல் நப்பாலத்தனர் என்ற பெயருடையார் ஒருவர் உளர் : பாலாசிரியர் என்ற சிறப்பு இவர்க்கு ஏன் உண்டாயிற்று என்பது புலனுகவில்லை. இளம்பாலாசிரியர் என்ற சிறப்புடைய புலவர் சிலர் உளர்; அவர்கள் இளம் பால் என்ற ஊரினர் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இளம்பாலாசிரியர் என்பதே பாலாசிரியர் என வந்ததாகக் கொள்ளின், இவரையும், இளம்பால் என்ற அவ்வூரின ராவர் என்று கொள்ளலாம்.

  • இரும்பை உருக்கி வார்த்துச் செய்தாற் போன்ற வலிய கைகளையுடைய கானவன், யானை வேட்டம் சென்று, வெண்கடம்ப மாத்தின் மறைவிலே இருந்து அவ்வழிவந்த யானேயை, ஆராய்ந்துகொண்ட அம்பு, அதன் மார்பில் தைக்குமாறு ஏவிக் கொன்று, தன் பகையைப் பாழாக்கும் வலிவு அமைந்த அதன் கொம்புகளைக் கொணர்ந்து, புல் வேய்ந்த தன் குடிசையைச் சூழ வேலியாக ஊன்றி, தன் வீட்டு மன்றத்தில் உள்ள பலாவின் பழத்தினின்றும் செய்த மதுவினே உண்டு மகிழ்ந்து, பின்னர்ச் சந்தன விறகால் சமைத்த சோற்றையும், ஊனேயும், தன் சுற்றம் சூழ இருந்து உண்டு வாழ்வன்,” எனக் கூறும் கானவன் வாழ்க்கை நம் கண்முன் வந்து தோன்றுமாறு செய்துள் Gfffff;",

'இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்,

விரிமலர் மராஅம் பொருந்திக், கோல்தெரிந்து, வரிதுதல் யானை அருகிறத் தழுத்தி, இகலடு முன்பின் வெண்கோடு கொண்டு,தன் புல்வேய் குரம்பை புலா ஊன்றி, முன்றில் டிேய முழவுறழ் பலவின் பிழி மகிழ் உவகையன், கிளையொடு கவிசிறந்து சாங்க ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும்.”

(அகம் : க.எஉ.)