பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுங் பாவைக்கொட்டிலார்

பாவை என்பது இளைய மகளிர் வைத்து விளையாடும் ஆடற்பொருள்களுள் ஒன்முய பதுமை; கொட்டில் என்பது சிறு வீடு. மகளிர் மணலால் மனேயமைத்து அதில் பாவையை வைத்து விளையாடினராக, அம் மனேயைப் பாவைக் கொட்டில் எனச் சிறப்பித்துப் பாடினமையால் புலவர் இப்பெயர் பெற்ருர் போலும்.

வடகாட்டு வாழ்வினாய ஆரிய அரசர்கள், கமி முகத்தைத் தம் ஆட்சிக்கீழ்க் கொண்டுவா அன்றே முயன்றனர் ; ஆணுலும், அவர் வெற்றி பெற்ருால்லர் ; இச் செய்திக்குச் சங்கப் பாக்கள் பலவும் சான்று பகர் கின்றன ; ஆரியப் படையொன்று, மலேயமான் திருமுடிக் காரிக்குரிய முள்ளுரைச் சூழ்ந்துகொண்டது என்றும், அப்படையை அவன் ஒருவனே அடித்துத் துரத்தினன்

என்றும் கற்றினேப் பாட்டொன்று கூறுகிறது: --

'ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப்

பலருடன் கழித்த ஒள்வாள் மலேயனது ஒருவேற்கு ஒடியாங்கு.? (சற் : க.எ0) இவ்வாலாற்றிற்கு மேலும் சான்றளிக்கும் ஒரு நிகழ்ச்சி யைப் புலவர் பாவைக்கொட்டிலாரும் குறிப்பிடுகின்றார் ; விற்படை, வேற்படைகளால் பெருமையுற்ற சோழர்க்கு உரியதும், வில்லரணுல் சூழப்பெற்றதுமாய வல்லம் எனும் நகரை முற்றி, அதைச் சூழ உள்ள காவற் காட்டகத்தே தங்கிய ஆரியப்படை, தமிழரசன் ஒருவல்ை முற்றும் அழிவுற்றது எனக் கூறுகிறது அவர் பாட்டு : .

- வென்வேல் -

மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லிண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளே

ஆரியர் படையின் உடைக.” (அகம் : டங்சு)

இவ் வரலாற்ற நிகழ்ச்சியோடு, மற்றும் இரு நிகழ்ச்சி

களையும் புலவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு அடங்காது