பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 குட்டுவன் கண்ணணுர்

ஒய்மா நாட்டைப்போன்றே, அதன் கலைநகராம் மாவில்ங்கையும் வளமைசால் பெருகாய்ப் போற்றப்படு கிறது : நெல்லறுக்கும் உழவர், தம்முடைய கூரிய அரி வாள், மிகுதொழில் மேற்கொண்டமையான், வாய்மழுங்கு மாயின், மேலும் மடிந்திராது விரைந்து அரிதல் வேண்டித் திட்ட எண் ணுவார் அச்சேற்றிற் படிந்துகிடக்கும் ஆமை யின் முதுகு ஒட்டைத் தீட்டுக் கல்லாகப் பிற முக்கொண்டு, அதன் மீது, அதைத் தீட்டுவர்; இத்துணே வளம்செறிந்த அந்நகர், பகைவர் அணுகுகற்கரிய அானும் உடைத்தா யிருந்தது; அந்நகரைச் சூழ அரிய அாண் அமைய, அவ் வரணேச்சூழ நீண்ட மதில் கிற்க, அம்மதிலைச்சூழ, ஆழ்ந்த அகழி கிடக்கும் என அதன் வளமும், வன்மையும் ஒருங்கே தோன்றப் பாடியுள்ளார்.

நெல்லரி தொழுவர் சுடர்வாள் மழுங்கின் பின்னை மறத்தொடு அரியக் கல்செத்து அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் நெல்லமல் பு:ாவின் இலங்கை..........”

குறும்படு குண்டசழ் நீண்மதில் ஊரே.’ (புறம் : கூஎக) நல்லியக் கோடன், கொடைலம் ஒன்றே உடையா னல்லன் ; அவன் குணங்களால் கிறைந்த குன்றெனப் போற்றத்தகுவன் ; அவன் குணநலமும், கொடைநலமும், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனர் எனும் புலவர், அவனேப் பாராட்டிப் பாடிய சிறுபாணுற்றப் படைக்கண் காணப்படும், செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன் மையும், இன்முகம் உடைமையும், இனியணுதலும், அஞ்சி னர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும், ஆணணி புகுதலும், அழிபடை தாங்கலும், கருதியது முடிக்கலும், காமுறப்படுதலும், ஒருவழிப் படாமையும், ஒடியது உணர் தலும், அரிவையர் ஏக்க அறிவு மடம்பதெலும், அறிவு. கன்கு உடைமையும், வரிசையறிதலும், வரையாது கொடுத் தலும்” என்ற தொடர்களில் தோன்றி கிற்றல் காண்க.

இத்துணை எல்லோனுகிய நல்லியக்கோடனைக் கானும் பேறுபெற்ற புலவர், தம்மை அவன்பால் கொண்டு உய்த்த