பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷42 குட்டுவன் கண்ணனர்

'மென்பாலான், உடன் அணைஇ

வஞ்சிக் கோட்டு உறங்கும் காரை அறைக் கரும்பின் பூவருந்தும் வன்பாலான், கருங்கால் வாகின் அரிகால் கருப்பை அலேக்கும் பூழின் அங்கட் குறுமுயல் வெருவ, அயல கருங் கோட்டு இருப்பைப் பூவுறைக் குந்து ; விழவின்ருயினும், உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து.'

(புறம் : .அச)

கரும்பனூர் கிழானேக்கண்டு பாராட்டி அவனுல் சிறப் புச் செய்யப்பெற்ற புலவர் என்னுகளுர், "யாம் ஆங்கிருத் தக்கால், இறைச்சியும், சோறும் கலந்த உணவை மிக வுண்டு தெவிட்டி வெறுத்த கிலேயில், பால் கலந்துசெய் தனவும், வெல்லப்பாகு கலந்து செய்தனவுமாய பண்ணியங் களே இது மிக இனிது என்றுகூறி, மெல்ல உண்டு மகிழ்ந்து வாழ்வேம் ” என்றும், கரும்பனூர்கிழான், கிணம் கலந்த நல்ல சோற் றுணவில், நீரினும் மிகுதியாக நெய்யைப் பெய்து எமக்கு அளித்துப் புரந்து, மண்ணவ ரெல்லாம் கண்டு மனம் நானும்படியாகப் பெரும்புகழ் பெறுவன் ; ஆங்கு வாழ்ந்த அங்காட்களில், யாம் உண வுண்ட உண்ணும் கலங்களில், உண்ணமாட்டாது ஒழித்து விட்ட மிக்க உணவை, அவ்வுண்கலத்திடையே வைத்து மடித்து எறிந்தும், தின்னுங்கால், பற்களிடையே சிக்கிக் கொண்ட ஊனைத் தோண்டி எடுத்தும் மகிழுமாறு கிகழ்ந்த நாட்களே அறிவோமேயன்றி, சென்ற நாட்க ளையோ, இனிவரும் நாட்களையோ, எண்ணி அறிந்தோ மில்லை” என்றும், இவ்வாறு அவன் ஊட்ட உண்ணும் மகிழ்ச்சியால், தம் வாழ்நாள்பற்றிய கினேவையும் மறந்து கிடக்கும் புலவர், ' கரும்பனூர்க் கிழானின் போன்பைப் பெற்ற எமக்குப் பொன்தான்் என்ன ஒரு பொருளா ? நெல் முதலாம்பொருள்தான்் ஒரு பொருளா ? நறுமணம் தரும் கள்தான்் ஒரு பொருளா ? இவற்றையெல்லாம்