பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 குட்டுவன் கண்ணனர்

னிச் சிறிது ஆற்றியிருத்தலே நினக்கு அறமாம்,' என்று கூறினுள். கோழியின் கூற்றமைய வந்துளது புலவர் பாடிய அப் பாட்டு: .

'கேளார் ஆகுவர் தோழி கேட்பின்

விழுமிது கழிவதாயினும், நெகிழ்நூல் பூச்சேர் அணையில் பெருங்கவின் தொலைந்தரின் நாள் துயர் கெட, பின் டேலர் மாதோ.”

- (குறு: உடுக.) இந்தப் பாட்டில், காட்டுவழியே செல்லும் பழந்தமிழ் மக்கள், இராக்காலத்தே தங்கட்குக் காட்டகத்துக் கொடு விலங்குகளால் ஊறு எதுவும் நேராமை கருதி, புலி தங்கிப்போய கற்குகைகளுள் தங்கிச் செல்வதும் உண் என்ற செய்தியையும் அறிவித்துள்ளார்:

'புவிபுகா வுறுத்த புலவுநாறு கல்லணை

ஆறுசெல் மாக்கள் சேக்கும்.” (குறுக் ! உங்உ)