பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக. பூதனுர்

பூதனர் பாடிய பாட்டொன்று நற்றிணைக்கண் இடம் பெற்றுளது; தாய் வீட்டிலேயே இருப்பின், தான்் விரும்பும் காதலனே மணந்து கற்புடையளாதல் இயலாதாம் என உணர்ந்த ஒரு பெண், தமர் அறியாவண்ணம், தன் காதல ைேடு அவனூர் சென்றுவிட்டாள் ; அதை அறிந்தாள் அவள் காய்; அவளோ அவள் மாட்டுப் பேரன்புடையவள்; பேணி வளர்த்தவள்; தன் மகளே அன்பால் அனைத்துக் கொள்ளுங்கால், அன்பின் பெருக்கால் இறுக அனைத்துக் கொள்ளின் அவள் மார்பகம் வருந்துமோ என எண்னும் அத்துணைப் போன்புடையாள் ; அவள் மகளோ, அனைத்த கையைத் தாய் சிறிது நெகிழ்த்தினும், தாய்க்குத் தன்பால் அன்பு குறைந்துவிட்டதுபோலும் என எண்ணி வருந்தும் அத்துணை அறியாமையுடையாள்; அத்தகையாள் ஏதிலான் ஒருவனுடன், கொடிய கோடையில் கிழலற்றதும், புலி வழங்கப்பெறுவதும் ஆய நீண்ட காட்டுவழியே சென்று விட்டமையினே எண்ணி எண்ணி வருந்தினுள். அவ்வாறு வருந்துவாள், மகளே மணக்கும் அத்தலைமகன், யான் வருந்த அவளைக் கொண்டுசென்ற கொடுமையுடையனே னும், என் மகள்பால் போன்புடையணுதலை அறிந்து ஒரளவு ஆறுதல் கொண்டேன் என்பதை, அவர்கள் செல் லும் காட்டுவழியில் வாழும் ஆண்புலி, வழிப்போவாரைக் கொல்லும் கொடுமை உடையதே ஆயினும், அது சன்று பசித்திருக்கும் தன் பெண்புலிக்கு இரை தேடித்தந்து பேணும் போன்புடையதாம் என்று கூறுவதால் உணர்த் திளுள். தாயின் இத் தனியன்பு தோன்றப் பாடிப் பாராட்டியுள்ளார் புலவர் : (நற் : உக).