பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங், குடபுலவியனுர்

செந்தமிழ் சேர்த்த பன்னிரு கிலங்களுள், குட்ட காட்டை அடுத்து வழங்கப்பெறும் நாடு குடகாடு ; குட நாடு, குடபுலம் எனவும் வழங்கப்பெம்; குடகாட்டிற் குரியாய சேரவேந்தர், 'குடவர் கோவே' எனவும், ' குடபுலம் காவலர் ” எனவும், தால்களான் அழைக்கப் பெறுதல் காண்க. குடபுலம் என வழங்கப்பெறும் குட நாட்டகக்கே பிறந்தமையான், புலவர் குடபுலவியனுர் என அழைக்கப்பெற்றுனார் ; இனி, புலவியன் என்பது இவரது இயற்பெயர்: குடநாட்டவராதலால், குடபுலவிய ஞர் எனப்பட்டார் ; புலவியன் என்ற சொல், விரிந்த அறிவுடையவன் எனப் பொருள்படவரும் தமிழ்ச்சொல்; இதைப் புலத்தியன் என்னும் வடசொற்றிரிபு எனல் மடமை எனக் கூறுவாருமுளர் ; குடபுலத்தே பிறந்தமை யான், குடபுலவியனுர் எனப்பட்டார் என இயல்பாகக் கொள்வதைவிடுத்து, மேற்கூறியவாறு கொண்டு இடர்ப் படுவது அத்தனைப் பொருத்தமுடைத்தன்று; குடபுலவிய ஞர் பாடிய பாக்கள் இரண்டு புறநானூற்றின் கண் இடம் பெற்றுள்ளன ; அவை இரண்டும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புகழ்பாடவே வந்துள்ளன; அவற்றுள் ஒன்று, அவன் போண்மையினைப் பாராட்டுவ தோடு, புலவர்தம் போர்க்களம் பாடவல்ல பெருமை யினையும் புலப்படுத்துகிறது; எனேயது, அவனுக்கு அரிய ஒர் அறவுரையினே அறிவுறுப்பதோடு, புலவர்தம் உழவின் உயர்வு உணர் அறிவினையும் உணர்த்தி கிற்கிறது.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள் கலைசிறக்கோளுவன் ; புலவர் பலரின் பாமாட்டைப்பெற்றவன் இவன்; அவ்வாறு பாராட்டப்பெறுதற்குக் காரணமாயது, இவன் கலையாலங் கானம் எனும் இடத்தே பெற்ற பெரு வெற்றியேயாம் :

நெடுஞ்செழியன் அரசுகட்டில் ஏறுங்கால் தனிமிக இளைய