பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதன் தேவனர் - 153

கன்று ஈன்ற எருமை கிறையப் பால்தர வேண்டின், அது கிறையப் புல் மேய்தல் வேண்டும்; ஆகவே, அவ் வெருமை, அதை உண்ணுமாறு ஊரில் உள்ள சிறுவர்கள், எருமைக் கன்றுகளைத் தொழுவத்தே விடுத்துவிட்,ே விடியற்காலையிலேயே புல்மேய ஒட்டிச் செல்வர். ஆனிரை ஒம்பும் இத்தொழிற் சிறப்பைப் புலவர் உணர்ந்து உண்ர்த்தி புள்ளார் ஒரு பாட்டில் :

'மன்ற எருமை மலர்தலைக் காரா

இன்தீம் பால்பயம் கொண்மார் கன்றுவிட்டு

ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும்

பெரும்புலர் விடியல்.” (கற் அ0}