பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு. பெருங்கண்ணனுர்

புலவர் பெருங்கண்ணனர் பாடிய பாக்கள் மூன்று : அவற்றுள் ஒன்று ஈற்றினையிலும், ஏனைய குறுந்தொகை:

யிலும் இடம் பெற்றுள்ளன. :

பொருள்தேடிப் பிரியவேண்டிய கிலே வந்துற்றது. ஒரு தலைவனுக்கு ; அங்கிலையில், அவன் மென்மையும், மணமும்

நிறைந்து பிடரிவரை தாழும் தழைத்த கூந்தலும், பனே போல் பருத்த தோளும், மகளிர்க்கு மாண் புதரும் மடப் பமும் உடைய தன் மனைவி.நல்லாளை ஒரு பக்கமும், நீரற். றதும், நீண்டு செல்வதும், கிழலற்றதுமாய தான்் செல்ல வேண்டிய வழிக்காட்சியை மற்றொரு பக்கமும் கிறுத்திக் கண்டான் ; இத்துனே இனிமையுடையாளப் பிரிந்து இக்

கொடிய காட்டுவழியிற் சென்று கலங்கவேண்டுமாயின், செல்வார், இவளினும் சிறந்த ஒரு பொருளைப் பெறுபவ ராதல் வேண்டும்; ஆனால், இவளிலும் சிறந்த ஒரு பொருள் உலகில் இல்லை என்பதை உணர்வான் அவன் ; ஆகவே, பொருள்விரும்பும் தன் உள்ளத்தை விளித்து, "உள்ளமே! இவளே ஈண்டுப் பிரிந்து ஆண்டுப் போந்து, அத்துயர் தாங்கும் ஆற்றல் இல்லேன் யான் ; ஆகவே, யான்

வந்திலன்; அவ்வாற்றல் வாய்க்கப்பெற்ற நீ அவ்வழிச் சென்று, சிறந்தது பெற்றுச் சிறப்புறுவாயாக!' என்று. கூறி வாழ்த்துவதோடு, நீ செல்லும் அவ்வழி, வருக்கிய தன் பிடிக்கு உணவு தேடித்தத்து இன்புற்று வாழும் களிறுகளை உடையது என்பதை உணர்ந்தால், உடனுறை வாழ்க்கையினே வெறுக்கும் உறுதி உண்டாதல் எவர்க்கும் அரிதாம் என்பதை உணர்வை என்று கூறி, பிரிந்துசேறல் பண்பன்று என அறிவுரையும் கூறினன். இவ்வாறு பொருளினும் பண்புநிறை மனைவியே மாண்புடையாள் எனக் கருதும் தலைவன் கூற்றினைப் பாட்டிடைவைத்தும்

பாடியுள்ளார் புலவர் : -