பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ.கா. பெருஞ்சாத்தனுர்

சாத்தன், பெருஞ்சாத்தன் என்ற பெயருடையார் பலராவர்; வீரனும் வள்ளலுமாய் விளங்கிய ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பான் ஒருவனும் உளன். அப்பெயர் பூண்ட இப்புலவர் பாடிய பாட் டொன்று குறுங்தொகைக்கண் உளது. .

கணவர்த் தொழுதெழும் கற்புடை மகளிர் பிறதெய் வங்களைத் தொழ எண்ணுர்; காதல் கிறைந்த கணவரைப் பெறமாட்டாமையால் கன்னிப் பெண்கள் உறும் துயரால் உடல் மெலிந்தாராயின், அதைப் பேயாற்கொள்ளப்பட்ட மையால் உண்டாய விளைவு எனக் கோடல் பெரும் பேதைமை ; இந்த உண்மைகளே உணர்ந்தவர் நம் புலவர். தான்் விரும்பிய தலைவன் விரைந்துவத்து வரைந்துகொள் எளிமையால் வருக்திய தன் உடல் வேறுபாட்டினேக் கண்ட தன் தாய், அது பேயாற் கொள்ளப்பட்டமையால் உண் டாயது எனப் பிறழக்கொண்டு, அது தீருமாறு ஆட்டை அறுத்தும், தினப்பலி கொடுத்தும், பல்வேறு இசை ஒலிக் கவும், ஆற்றிடைக் குறைகளில் வெறியாட்டெடுத்தாள்ாக, அவள் வேண்ட, ஆண்டு வெளிப்படுதலல்லது, தான்் உற்ற சோபைப் போக்க இயலாத முருகன்போலும் பிற தெய் வங்களையும் வழிபடவேண்டி வந்ததே என வருந்தினுள் ஒரு தலைவி எனப் பாடிய அவர் பாட்டின்வழி அவ்வுண் மைகள் புலனுதல் காண்க. . . . .

மறிக்குரல் அறுத்துத் தினைப்பிாப்பு இரீஇச் செல்லாற்றுக் கவலைப் பல்லியம் கறங்கத் தோற்றம் அல்லது நோய்க்கு மருந்தாகா வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப் பேஎய்க் கொளீஇயள் இவள்எனப் படுதல் நோதக்கன்றே. (குறுந்: உண்க.)