பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ0. பெருமருதன் இளநாகனுர்

இவர் பெருமருதன் என்பாரின் மகளுர்; இளநாகனர் என்ற இயற்பெயருடையார் ; மருதன் இளநாகனர் என் பாரின் வேறு அறிவித்தற்பொருட்டுப் பெருமருதன் இளநாகனர் என அழைக்கப் பெற்று ளார்.

தலைவன் விரைவில் வரைந்துகொள்ளானகவே, தலை விக்கு உள்ளத்துயர் மிக்கது; அதனுல் அவள் உடல் ஏலமும் குன்றிற்று ; தன் மகளின் உடல்நலக் குறையறிந்த தாய், அதற்காம் காரணம் யாதென அறிந்து அவள் வரை விற்கு வழிசெய்தல் ஒழிந்து, அவளைப் புறத்தே போகா வாறு இல்லில் அடைத்து, அவள் நோய்தீர வெறியாட் டெடுக்கத் தொடங்கினுள். தாயின் செயலால் தலைமகள் துயர் மிக்கது; தாய்க்கு அறிவுவாச்செய்து தன் மணத் திற்குத் துணே புரிவாரைத் தேடினுள் தான்் அதுகாறும் காத்த தினே அவள் கண்முன் கின்றது; கினே கதிர்வாங்க வேண்டிய காலத்தே வாங்காது காலம் தாழ்க்குமாயின், தம்மில் தவறு நிகழ்ந்ததாகவும், அதேைலயே தினே கதிர் விட்டிலது எனவும் உணர்வர் அங்கில மக்கள் ; அத்தவறு யாது என ஆராய்ந்து அறிந்து அதைப் போக்குவர். இதையுணர்ந்த தலைவி, அத்தினையை நோக்கி, தினேயே! கின்னே இதுகாறும் கிளி முதலாயின அழிக்காவாறு காத்தேன்; அவ்வாறு காத்து கின்றது, புனங்காவல் கருதி ஆங்கிருப்பதால் தலைவனைக் காணலாம் என்ற எண்ணத் தினலேயேஆம் என்பதை நீ அறிவாய் , அவ் அன்பிற்கு வழிசெய்யாது அன்னே என்னை இற்செறித்துவிட்டாள்; இச்செயல் அறனன்று என்பதை அறிவாய் அறிந்த வறியார் நாட்டில் கதிர்விட்டு வளர்தல் நினக்கு முறை பன்று; மேலும் என்னை இற்செறித்துவிட்டமையால் யுேம் கின்னேக் காப்பாரை இழந்துவிட்டனே ; அதனல் கிளி முகலாய பறவைகள் கின்னே அழிக்கத் தொடங்கிவிட் டன; இவ்வாறு எனக்குத் துயர் விளைத்ததோடு கிணக்கும் கேடு சூழ்ந்துவிட்டாள் அன்னை ; கேடு சூழ்ந்தாசைக்