பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. குன்றுகண்பாலியாதனுர்

ஆதன் என்ற பெயர், கிள்ளி என்ற பெயர் சோழர் களையும், வழுதி என்ற பெயர் பாண்டியர்களையும் குறிக்க வழங்கப்பெறுதலேபோல், சேர அரசர்களைக் குறிக்க வழங்கும் பெயர்களுள் ஒன்றாம்; இவர் பிறந்த ஊர் பாலி ; அப் பாலிசகர், குன்றின்கண் அமைந்து கிடந்தமையால், அது குன்றுகண் பாலி என்றே வழங்கப்பெற்றது; மலையாள மாவட்டம் கோழிக்கோட்டுப் பகுதிக்கண், பாலிக்குன்று என இன்று கிரிந்து வழங்கப்பெறும் ஊரே அக்குன்று கண்பாலியாம். குன்று கண்பாலியில் பிறந்து, ஆதன் எனும் இயற்பெயர் பூண்டமையால் புலவர், குன்று கண் பாலியாதனுர் என வழங்கப்பெற்ருர் ; இக் குன்று கண் ಕ್ದಿ எனும் :: ஆக ஆகக் குண்தெண் பாலியாதனா என ஆகிவிடவே, புலவா ர்ை, ஆழ்ந்த கண்கள் ಲ್ವಿ எனவும் '; உண்மை அஃதன்று ; சோர்க்குரிய பாலிநகர்க்கண் பிறந்து, அவர்கம் குடிக்குரிய இயற்பெயர்பூண்ட கம் புலவர், அச்சேரவேந்தருள் ஒருவனேயே பாராட்டியிருப் பது, அவர்தம் குடிப்பற்றினே அறியச்செய்கிறது.

பாலியாதனுர் பாராட்டிய சேரவேந்தன், சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனுவன் ; செல்வக் கடுங்கோவாழியாதன், சேரர் குடியில், இரும் பொறை மரபினருள் வந்தோனுவன்; அந்துவஞ்சோல்இரும் பொறை இவன் தந்தை இவன் மனைவி, இமயவரம்பன் நெடுஞ்சோலாதன் மனைவியின் உடன்பிறந்தாளாவள்; தக ர்ே எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற வீரமகனேத் தவமகளுகக் கொண்டவன் செல்வக்கடுங்கோ; செல்வக் கடுங்கோ, கொற்றமும், கொடையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஒப்பற்ற குணக்குன்று : பாரிக்குப்பின், செல்வக் கடுங்கேர்வே, என்க் கபிலர் கருதினர் எனின், இவன் பெருமையினைக் கூறல் வேண்டாவன்ருே ஈத்தது