பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 குட்டுவன் கண்ணஞர்

இாங்கான், ஈ த் தொ று ம் மகிழான் ; ஈத்தொறும் மாவள்ளியன் ” எனச் சான்ருேர் இவனைப் பாராட்டுவர் எனக் கபிலர் பாடியுள்ளார். சோமான், நகையினும் பொய்யா வாய்மையும், புறஞ்சொற்கேளாப் பெருமையும் உடையவன் ; ஒரு முற்றுகையில், இருபெரு வேர்தரை வெல்லும் ஆண்மையும், ஆற்ருது அடிபணியும் பகைவர் பால் அருள்செய்யும் ஊராண்மையும் ஒருங்கே உடையவன்; இன்னபல தன் புகழெலாம் தோன்றப் பாடிய புலவர் கபிலர்க்குச் சிறுபுறம் என நூருயிரம் காணம் கொடுத்து, நன்ரு என்னும் குன்றேறி கின்று தன் கண்ணிற் கண்ட தாடெல்லாம் காட்டிக்கொடுத்த கொடைச்சிறப்புடையவன் செல்வக்கடுங்கோ; தன் வாழ்நாள் இறுதிக் காலத்தே, சிக்கற்பள்ளி எனும் இடத்தே கிடந்து உயிர்துறந்தமை யால், சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ என அழைக்கப்பெற்றுளான்.

வாழியாதனே வாழ்த்திய நம் புலவர், அவன் பகை வரை வென்று அவர் பணிந்து தந்த திறையைக் கொணர்ந்து தன் நண்பர்க்கும், பரிசிலர்க்கும் பகிர்ந்தளிக்கும் பெருமை யினையும், வந்து தன்னைப் பாடுவார் தம் இழிநிலை குறியாது, தன் பெருமைக்கேற்ப அவர்க்கும் பெரும்பொருளேக்கரும் தகுதியினேயும் பாராட்டி, அவன் நாடு நோக்கிவரும் இரவலர், இடையில் வேற்று வேந்தரைக் காணின், யாம் செல்வக்கடுங்கோவாற் சிறப்பிக்கப்பெறும் இரவலரேம் எனின், அவ்வேந்தர், தம் குடை தாழ்த்திப் பணிந்து போவர் எனக்கூறி அவன் பேராண்மைத் திறத்தினையும்

பாடியுள்ளார். செல்வக் கடுங்கோ இவ்வாறு சிறந்த பல . பண்புடையதைல் அறிந்து பாராட்டிய புலவர், அவன் பொருநையாற்று மணலினும் பல்லாண்டு வாழ்க அவன் நாட்டைச் சூழஉள்ள நஞ்சைகிலம் அனைத்திலும் விளையும் நெல்லிலும் பல்லாண்டு நிலைபெற்று வாழ்க எனவும் வாழ்த்தி, தம் உள்ள வேட்கையின் உயர்வையும், அவன் . நாட்டு நெல்வளச் சிறப்பையும் ஒருங்கே உணரவைத்

துளளாா :