பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. குளம்பந்தாயனுர்

ளம்பன் என்பார்க்கு மகனுய்ப் பிறந்து, தாயஞர் எனும் இயற்பெயர் பூண்டு வாழ்ந்தமையான் புலவர் குளம்பந்தாயனர் என அழைக்கப்பெற்றுளர்; காட்டிடை நடந்த கடும் போர்க்களத்தே கணவனே இழந்த காரிகை கண்ணிர் கசிந்து புலம்பும் முதுபாலேத் துறை கழுவவந்த பாட்டொன். புலவர் பெயரால் புறநானூற்றின் கண் இடம் பெற்றுளது.

களத்தே கணவன் இறந்தான்் என்ற செய்தி அறிந்து ண்டுச் சென்று அவன் உடலைக்கண்ட அவன் மனைவி, அவ்வுடலருகே அமர்ந்து, அவ்வுடலை உயிருடைக் கணவ ஞகவே கருதி, ஐய! என்னெடு களம் புகுந்த போர்வீரர் எல்லாம், அமர்மேற் கொள்ளவும், யான் மட்டும் இறந்து போனேன் ; இனி, என்னேப் பிரிந்தறியா இப்பெண்ணி னல்லாள் எங்ங்ணம் உயிர்வாழ்வள் ' என என்பொருட்டுக் கவலை கொள்ள ற்க 1. வளையணிந்து வனப்புற்று விளங்கிய என் கை, வாேகழலப் பெற்றமையால், மூங்கிற் பட்டை கழன்றுக, வெளுத்துக் காணப்பெறும் மூங்கிலேபோல், வெளுத்து வனப்பிழந்ததாக, யானும் உயிர்விடுதலல்லது யிேர் இறந்த செய்தியை கின்னுார்க்குக் கொண்டு செல் லேன் ” எனக்கூறி அழுதாள் என்ற அப்பாட்டு, கணவனே இழந்து வாழ எண்ணுக் கவினுறு மகளிர் மாண்பு புலப்பட

என் திறத்து அவலம் கொள்ளல் இனியே; வல்வார் கண்ணி இளையர் திளைப்ப கோஅல் என வந்த மாறே; எழாநெல் பைங்கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின் வளையில் வறுங்கை ஒச்சிக் - - கிளேயுள் ஒய்வலோ கூறுகின் உரையே.’ (புறம்: உடுங்)