பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - குட்டுவன் கண்ணனர்

என்பதை நீ அறிவை; அவரோ, கார்காலத் தொடக்கத்தே வருவேன் எனக் கூறிச் சென்றுளார்; அவர் அக்காலத்தே கில்லாது வருவர்; நீ காணும் இக்காட்சிகள், கார்காலத்துக் காட்சிகளாயின், அவர் வந்திருத்தல் வேண்டும். ஆணுல் அவர் வத்திலர்; அவர் வாராமுன் வந்து தோன்.மும் இக் காட்சி, கார்காலத்தது அன்று; கார்காலக் காட்சிபோல் தோன்றும் பொய்க்காட்சியே; பொய்க்காட்சி கண்டு புலம் பல் ஒழிக’ எனக் கூறித் தேற்றினுள். தோழியின் இக் கூற்றமைந்த பாடலைப்பாடி, தம் கணவர் பொய்யறியா வாய்மொழியராவர் என்னும் உறுதியும், அவர் அவ்வுரை பொய்யின் வருந்தும் உளமும்கொண்ட உயர்ந்த பண் பினராய பண்டைத் தமிழ்ப்பெண்களின் பெருமையினேப் பாராடடியுளளாா புலவா.

'தண்துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லே

முகைதலை திறந்த காற்றம், புதல்மிசைப் பூமலி தளவமொடு தேம்கமழ்பு கஞல, வம்புப் பெய்யுமால் மழையே; வம்பன்று கார்இது பருவமாயின், ,' - - - - - - . ಎ773 ார்ம் ಗ್ಯಕ್ Garಡಿ,” (கும்: -அடி)