பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. குன்றம்பூதனுர்

ஊர் என்ற பொதுச்சொல்லால் சிறப்பித்து உரைக் கப்படுவது உறையூர் என்ப; ஊரெனப்படுவது உறை ஆர். அதைப்போலவே, தமிழகத்தே குன்றுகள் பல கின்ற தோன்றிலும், முருகன் உறையும் சிறப்புடைய திருப்பாங்குன்றம் ஒன்றையே, குன்று என்ற பொதுச் சொல்லால் புலவர்கள் வழங்குவர்; பூதனர் எனும் இயற் பெயருடைய இப்புலவர், இருபெரும் பரிபாடற் பாக்களால் அக்குன்றினையும், அக்குன்றிலுள்ள சோலே, சுனே, அருவி முதலாயினவற்றையும் பாராட்டியுள்ளமையான் குன்றம் ஆதனுர் எனக் குறிக்கப்பெற்றுளார்.

புலவர் குன்றம்பூதனர், புலவரைப் போற்றும் புலவ சாவர். புலவராவார், நான்மறைப் பொருள்களை நன்கு தேர்ந்து, தாம் தேர்ந்த அங் நான்மறைகளின் ஏற்புகழை காடறிய நன்கு நாட்டவல்ல நல்லறிவுடையவர்: அவர்தம் காக்கள், வாய்மொழி அன்றி வேறு பொய்ம்மொழி யறியாப் பெருமை வாய்ந்தனவாம் என்று கூறிப் புலவர் தம் பெருமையினேப் போற்றுமுகத்தான்், புலவர்க்காம் இலக்கணம் இஃது எனவும் கூறும் திறம் அறிந்துகோடற்கு உரித்தாம்.

" நான்மறை விரித்து, நல்லிசை விளக்கும்

வாய்மொழிப் புலவீர்!” (பரிபாடல் : க, கஉ-கங்)

குன்றம்பூதனர் பாட்டு, அவர் தமிழின் பெருமை யறிந்து போற்றும் தமிழ் உள்ளம் உடையாாவர் என்பதை உணர்த்தி கிற்கிறது. யாம்அறிக்க மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணுேம்” எனப் போற்றுதற்குக் காரணமாய் அமைந்தது, தமிழ். அது பொருள் இலக்கணம்பெற்ற பெருமையுடையதே ; அப் பொருள் இலக்கணம் காணப்பெருமையால் கலங்கிளுன் ஒரு பாண்டியன்; அவன் கலக்கம் போகப், பொருள் இலக்கண்ம்

உரைக்கும் பெரு.ால் ஒன்றைத் தாமே ஆக்கித்தந்தார்.