பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - குட்டுவன் கண்ணனர்

ஆலவாயுறை யெம்மான் என்ற வரலாறு பொருள் இலக்க னப் பெருமையினையும், அதனேக்கொண்டுள்ளமையால் தமிழ் மொழிக்கு உண்டாம் சிறப்பினையும் எடுத்து உரைக் தல் காண்க. மக்கள்தம் அகப்புற ஒழுக்கங்களே உலகறிய உணர்த்தி, அவர்தம் வாழ்க்கையின வளமாக்க உதவும் பொருள் இலக்கணம், பிறமொழிகள் எதுவும் அறியாப் பெருமைவாய்ந்ததாம்; அதைப்பெற்ற பெருமை தமிழ் மொழிக்கு ஒன்றே உரித்து; தமிழ்மொழிக்கே உரிய இச் சிறப்பினை எடுக்கோதிப், பொருள் இலக்கணத்தின் மாட்டும், அதையுடைய தமிழ்மொழி மாட்டும் தமக்குள்ள பற்றினேப் புலவர் குன்றம்பூதனர் தெளிய உணர்த்தி புள்ளார். . r ‘. .

'தள்ளாப் பொருள் இயல்பின் தண்தமிழ்.” . - • . - (பரிபாடல் - க - உடு).

அகவொழுக்கம், களவு, கற்பு எனும் இரு பிரிவுகளை உடைத்த அறிவு, உருவு, திருவான் உயர்ந்த ஒர் ஆனும், ஒரு பெண்ணும், பிறர் அறியாவாறு கண்டு, காதல் கொண்டு வாழும் ஒழுக்கத்தினே உணர்த்துவது களவு; அவ் வாம களவொழுக்கம் மேற்கொண்ட அவர்கள், ஊரார் அறிய மணந்து மேற்கொள்ளும் இல்லற இயல்பினைக் கூறுவது கற்பு; இவ்விரு வொழுக்கங்களிற் கற்பினும் களவே சிறப்புடைத்து என்று கூறும் புலவர் குன்றம் பூதனர், காம் கூறும் அக்கூற்றினே நாட்டவல்ல நல்ல காரணங்களே நிரலே எடுத்துக்கூறியுள்ளார். . . . களவுக் காலத்தக் காதல் ஒழுக்கக்கே முன் மெய்யும புணர்ச்சி யறியாதார் இருவர், உள்ளம் ஒன்றுபட, இயற்கை வழிகூட்ட மெய்யுமதலால் ஆம் அவ் இன்பக் தினே முதற்கண் பெறுதலால், அவ் இன்பம், முன் அறி யாப் பேரின்பமாம்; அக்காலத்தே அவர் பெறும் அவ்வின் பத்தினேப் பின்னர் எக்காலத்தும் பெறுதல் இயலாது. கற்புக் காலத்துக் காதல் ஒழுக்கத்திற்குப் புலவி இன்றி யமையாது வேண்டப்படும்; புலவி உண்மையிஞலேயே, அக்காலத்து இன்பம் சிறப்படைகிறது. 'உப்பம்ைந்தற்ருல்