பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல. கூற்றங்குமரனுர்

நம் புலவர்தம் இயற்பெயர் குமரஞர் : அப்பெய ருடைப் பிறரின் வேறு அறிதற்குக் கூற்றங்குமானுர் எனப் பட்டார் : கூற்றன் என்ற அச்சிறப்பு, அவர் கங்கை பெயரைக் குறிக்க வந்ததாம் என்ப; சில ஏடுகளில் இவர் பெயர் கூத்தங்குமானுர் என எழுதப்பட்டிருப்பது கொண்டு, நம் புலவர், புலமையோடு கூத்தாடவல்லவரு மாவர் எனக் கொள்வாரும் உளர். இவர் பெயருடைப் பாட்டொன்று நற்றிணைக்கண் இடம்பெற்றுளது.

களவொழுக்க இன்பமே கவின் மிக உடைத்தாம் எனும் உளம் உடையணுய் வரைதலை கினேயாது ஒழுகும் கலேமகன், இடையே சிலபொழுது வாராமையால் வருக்கினுள் தலைவி : அக்கவலையால் அவள் அழகும் அழிந்தது : இங்கிலே மேலும் நீட்டித்தல் நன்றன்று ; அவன் விரைந்து வந்து தன்னே வரைந்து கோடலே விரும்பினுள் கலைவி ; ஆயினும் அதைத் தான்ே செய்து கோடல் இயலாது ; ஒன்று தலைவன் வரைவு வேண்டி வந்து வரைந்துகொள்ளுதல் வேண்டும் : அல்லது, கமர், தம் மகள் தம் கருக்கறிந்து தலைமகனுக்கு மணஞ்செய்து கால்வேண்டும்; அவர்கள் அதை மேற்கொள்ளுமாறு செய்தலும் தன்னுல் இயலாது ; அதைச் செய்வாள் தோழியே ; அழியும் தன் அழகைக் கண்டும் அவள் அதைச் செய்திலள் ; அதனல், உலகில் உள்ளார் அனேவரினும் அவளே கொடுமையுடையாள்போல் தோன்றிற்று; ஒருநாள், அவளே அழைத்து, அவள் குறித்துத் தன் உள்ளம் கொண்டுள்ள எண்ணத்தை எடுத்தும் கூறிவிட்டாள்; அவ்வாறு கூறிய தலைவியின் கூற்றே பொருளாகப் பாடிய அப்பாட்டில், கலேவியின் மேனி அழகு, அசோகின் அந்தளிர் போன்றது ; தலைவன் மலைச்சாரல் மழைமிகப் பெற்று மணம் காறும் மாண் புடையது; ஆண்டுறை வண்டுகள் மலர்தோறும் சென்று மதுவுண்ணுங்கால் எழுப்பும் இனிய ஒசையினை, அசுணம்