பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கொல்லன் அழிசி. 35

மற்ருரைக் கொண்டிருப்பதோடு, விரைந்து விடியாது, நீண்டபெரும் இாவினையும் கொண்டுள்ள இவ்வூர் எம்போல் துயருறுவார் வாழ்தற்கமையா வன்கண்மையுடைத்து ; ஈண்டு உயிர்மேற்கொண்டு வாழ்தலினும், மாண்டு மடிதலே நன்றாம் ' என்றும், தலைவனைப் பெற்று மகிழ்ந்து வாழ மாட்டாமையால், என் பேரழகு, பசலையால் பாழுறுகிறது; அப்பேரழகைப் பெற்றுள்ள எனக்கோ அதைப் பயன் கொள்ளும் என் தலைவர்க்கோ பயன்படாதொழிகிறது; அந்தோ ! என் செய்வேன்? என்றும் கூறிக்கூறி வருந்தி ள்ை தலைமகள் எனப் பாடிய அப்பாக்கள், மகளிர், தம்மை மணந்த கணவன்மார், தம்மைவிட்டுப் பிரிந்து சென்ற காலத்தே எத்துணைக் கொடிய துன்பத்தில் ஆழ்வர் என்ப தைத் தெளிய உணர்த்தியுள்ளமை உணர்ந்து பாராட் வோமாக!

இவ்வாறு பாடிய பாக்களிடையே புலவர் அமைத் துள்ள அரிய உவமைகள், அப்பாக்கள் அளிக்கும் பொருட் சிறப்பிற்கு மேலும் பொலிவு அளித்து கிற்கின்றன ; அவரை மலர், கிளிமூக்குப் போலும் ; மனம் நிறை முல்லை அரும்பு, காட்டுப்பூனேயின் கூரிய பல்போலும் ; இருளில் மறையும் மலே, ஆழத்தால் இருண்ட கடலில் ஆழும் கலம் போலும் என்ற இவ்வுவமைகள் புலவர்தம் புலமைக்குப் பொன்ருப் புகழளிப்பனவாம்; - -

தலைவி, கான்பெற்ற அழகு, கலைவன் பிரிந்து உறைவ. தால், தனக்கும் பயன்தாராது, தலைவலுைம் காப்பெருது அழிதற்கு, பசுகரும் பால், அப்பசுவின் கன்ருலும் உண்ணப்பெருது, கறக்கும் கலத்துட் சேர்ந்து பிறர்க்குப் பயன்தாாது, மண்ணிற் சிந்தி மாண்பிழத்தலே. உவமை காட்டிளைாகப் பாடியுள்ள புலமை, அம்மம்ம அரிது! அரிது! கன்று உண்டபின், கலத்திலும் கிறைந்து சிறைய வேண்டிய பால்போல், தலைவியின் அழகு, தலைவிக்கும் பயன்பட்டுத் தலைவனுக்கும் தன்னேரில்லாப் பேரின்பக் தைத் தரவல்லதாம் ; அத்தகைய பேரழகு பயனுருது கெடுதல் கொடுமையினும் கொடுமையேயாம்; கமக்கும்,