பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக கோண்மா நெடுங்கோட்டனுர்

இவரைப்பற்றி யாதும் விளங்கவில்லை. யானேயின் நெடுங்கோட்டை கோண்மாநெடுங்கோடு எனச் சிறப்பித் தமையான், இவர்க்கு இப்பெயர் உண்டாயிற் று எனக் கொள்ளலாம். இப்போது கிடைத்துள்ள இவர் பாட்டில், இதுபோன்ற சொற்ருெடர் காணப்படவில்லை. இவர் பாடிய பாட்டு இஃது ஒன்றே எனத் தணிதல் கூடாது; இதுபோன்ற பல பாக்களை அவர் பாடியிருத்தலும் கூடும்; நம்மால் இப்போது காணப்பெரு அப்பாக்கள ஒன்றில் இச் சொற்ருெடர் அமைந்திருத்தலும் கூடும். எதையும் துணிந்து கூறுதற்கு இல்லை.

பரத்தை வீட்டில் வாழும் தலைமகன், தனக்கு மகன் பிறந்தான்் எனக் கேட்டுத் தன் வீடு வருவோன், நள்ளிர வில், ஊரில் உள்ளார் எவரும் காணுவாறு, கள்வனப் போல வர்தான்் என்று கூறி, மகனுக்குக் தந்தையாம் தகுதியுடையாய காம், தவறி ஒழுகுதல் தகுதியுடையது அன்று என்ற எண்ணத்தை இயல்பாகவே பெற்றுக் திருக்கிய நெறியினராவர் அக்கால ஆண்மக்கள் என்ற அரிய செய்தியை அறிவித்துள்ளார் புலவர்.

'கள்ளென் கங்குல் கள்வன் போல அகன்றுறை ஊரனும் வந்தனன் சிறந்தோன் பெயான் பிறந்த மாறே.” (நற்: ச0)

இப்பாட்டில் மகப்பேறு பெற்ற ஆண்மகனுக்குரிய தந்தையைச் சிறந்தோன் என்றும், பிறந்தமகனே, அச்சிறங் தோன் பெயான் என்.றம் பெயரிட்டுப் பாடியுள்ளமை பாராட்டும் தன்மையவாம்.