பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. கோவேங்கைப் பெருங்கதழ்வர்

குறியபல கற்களிடையே பருத்து வளர்ந்துளது உயர்ந்த ஒரு வேங்கைமரம் ; மரம் கிற்கும் இடக்கருகே, ஒடிவருகிறது, மலேயுச்சியினின்றும் விரைந்த விழும் ஒர் அருவி; வீழும் அருவியின் விரைவால் தெறித்த விழும் கற்களால் தாக்குண்டு, மலர்கள் எல்லாம் உதிர்ந்துவிடுவ தால் வெறுஞ்சினை உடையவாகிறது அவ்வேங்கை , அவ் வாறு வந்த அவ்வருவி, குறும்பொறைகள் இடையிடையே குறுக்கிடுவதால் வளைந்து வளைந்து செல்லும் காட்சி, பாம்பு செல்வதுபோல் தோன்றிக் சுவின் அளிக்கிறது. இவ்வாறு காட்டும் ஒரு காட்சியில், புலவர், வேங்கையின் சிறப்பையும், அருவியின் விரைவையும் சிறப்பித்துப் பாடி யுள்ளமையால், கோ வேங்கைப் பெருங்கதழ்வர் எனப் பெயரிட்டுப் பாராட்டப்பெற்று ளார்.

ஒரு தலைவன் வரைந்து கொள்ளுதற்கு வேண்டும் பொருள் தேடிக் கொணர்வான் வேண்டிப் பிரிந்தான்்; அவன் பிரிவார் முது வருந்தினுள் அவன் தலைவி அவ்வாறு வருந்துவாளே நோக்கி, தலைவர் மணமுயற்சி மேற் கொண்டன் ருே பிரிந்துளார் ; அத்தகையார் நட்பைப் பெற்ற நீ வருந்துதல் அழகன்று ” என்று கூறித் தேற்ற முயன்ருள் அவள் தோழி. அதுகேட்ட தலைவி "தோழி! அருவி நிலத்தில் பாய்ந்து வளந்தந்து பயன்தருவதாயினும், இடையில், கல்லே உருட்டலும், மலர்களைச் சிதைத்தலும், அாவுபோல் தோன்றலும் ஆய துன்பந்தரும் செயலையும் உடையதாதலேப்போன்றே, தலைவன் நட்பு, இறுதியில் இன்பமே தரும் என்ருலும், இடையில் பிரிந்து செல்வதால் பெருந்துயர் தாராகின்றது ; யான் வேண்டுவது இத்தகைய நட்பை அன்று ; பிரியாப் பெரு நட்பைப்பெறவே என் னுள்ளம் நாடுகிறது ; அக் கட்பைப் பெறமாட்டாமையால் வருந்துகின்றேன்” என்று கூறினுள். தலைவிக்கும் தோழிக்கும் நிகழ்ந்த இச்சொல்லாடல்கள், வெளிப்புடை