பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்திநாதனுர் 5芬

செயலால், பாம்பும் இவளும் ஒப்புமை உடையரே ஆயினும், செயல்முறையால், பாம்பினும் கொடியாள் இவள் என்பதையும் கூறியுள்ளார் ; பாம்பு, யானையைத் திண்டிக் கடித்தாலன்றித் தீங்குவிளேத்தல் இயலாது ; இவளோ, அணுவ வாராது அகன்று கின்ற பார்த்த அளவி லேயே பெருந்துயர்தரும் போற்றல் உடையவள் என்று கூறுவதையும் நோக்குக.

' உருவுகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருங் தேர்க்கு அச்சாணி அன்னர் உடைத்து’ என்ட ஆகலின், பாம்பு, இளையாள் இவர்தம் சிறுமையும், யானே, தலைவன் இவர்தம் பெருமையும் கண்டு மயங்குதல் கூடாது என்ற பொருளும் தோன்றப் பாடிய புலமை கலம் பாராட்டற் குரித்து; இத்துணைப் பெரும் பொருள் எல்லாம் ஒருங்கே அமையவந்த அவர் பாட்டும் நான்கடியே கொண்ட சிறிய பாட்டாதல் அவர் பெருமைக்கு ஒர் எடுத்துக் காட்டாம் :

" சிறுவெள் அாவின் அவ்வரிக் குருளே

கான யானை அணங்கி யாஅங்கு, இளேயஸ், முளைவாள் எயிற்றள், வளையுடைக் கையள் எம்அணங்கி யோளே.

(குறும் : க.க )