பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்தந்தையார் 59

மகிழ்வதையும், அவன் யானைகள் இடியொலிபோல் முழங்கி விற்பதையும் கண்டார் , அந்தோ, கிள்ளியொடு எதிர்ந்து, அவன் கையகப்பட்டு வருந்துவார் யாரோ? அவர் அவனுல் இறத்தல் உறுதியாதலின் அவர் மிகவும் இரங்கத்தக்காராவர் எனக்கூறி வருந்தினர்.

ஆர்ப்பு, எழுகடலினும் பெரிது ; அவன் களிறே, கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆளுவே , யார்கொல் அளியர் தாமே, ஆர்கார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவிகை மள்ளன் கைப்பட்டோரே.” (புறம் : அக)

போாவைக் கோப்பெருகற்கிள்ளியும், ஆமூர் மல்லலும் ஆற்றும் மற்போரைக் கண்டார்; மற்போரில் மல்லனப் பற்றி வெல்லத் துடிக்கும் கிள்ளியின் கைகளின் விாை வினைக் கண்டார்; ஊரில் விழா நிகழினும், மனைவி பிள்ளைப் பேறுப் பருவநோயால் வருந்தினும், அவ்வீரிடத்தும் சென்று உதவுதலைக் கடமையாகக்கொண்ட புலைமகன் ஒருவன், கான் செய்யத் தொடங்கிய கட்டிலே முடித்துச் செல்ல விரும்பிய கிலேயில், ஞாயிறும் மறைந்துபோதலை அறியின், அவன் கைப்பற்றிய, வாரைப் பிணிக்கும் ஊசி எத்துணே விாைவும், பரபரப்பும் கொள்ளுமோ அத்துனே விரைவும், பரபரப்பும் கிள்ளியின் கைகளிடத்தே அமையக் கண்ட புலவர் அக்கைகளைப் பாராட்டி மகிழ்ந்தார்:

' சாறுதலைக் கொண்டெனப், பெண் ஈற்று உற்றெனப்

பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டில் நினக்கும் இழிசினன் கையது போழ்தாண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருநளுெெ ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே.’ (புறம் : அ.உ)

மற்போரில் கிள்ளியின் கைவண்ணம் கண்டு களித்த புலவர், அவன் கால்வண்ணம் கண்டு கழிபேருவகை கொள்வாாயினர் ; கிள்ளியின் ஒருகால், ஆமூர் மல்லனின் - ஆற்றல் எல்லாம் ஒருங்கே அடங்குமாறு அவன் மார்பிலே